அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, அக்டோபர் 20, 2012

பிடிக்காதவர்களை ஒடுக்கத்தான் ரெளடிகள் பட்டியலா? நீதிபதி ஆவேசம்

காவல் துறை நினைத்தால், ஒருவரை எப்படி வேண்டுமானாலும் பழிவாங் கலாம் என்பதற்கு ஒரு உதாரணம் வேடியப்பன் வழக்கு.  

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வேடியப்பன். அரூர் அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் சேவைக்கு 2,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக அவரிடம் சிலர் புகார் சொன்னதை வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை அரூர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாகப் பேச அவரை வரச்சொல்ல... அந்த சந்திப்பில் மோதல் நடந்துள்ளது.


அதுதொடர்பாக, வேடியப்பன் கொடுத்த புகாரைக் கண்டுகொள்ளாத போலீஸார், டாக்டர் செல்வம் கொடுத்த புகாரில் வேடியப் பனைக் கைதுசெய்தது. பள்ளிப்பட்டி காவல் நிலையத்துக்கு வேடியப்பனைக் கொண்டுசென்று, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர். வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கியிருக் கிறார்கள்.
அந்த வெற்றுக் காகிதங்களில் எதை எதையோ எழுதி, அவரது பெயரை ரௌடிகள் பட்டியலில் சேர்த்து விட்டனர். ரௌடிகள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், எப்போதும் போலீஸ் கண்காணிப்பில் இருப்பார்கள். சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. முக்கியத் தலைவர்கள் வரும் நேரங்களில் கைது செய்யப்படுவார்கள். எங்கு திருட்டு நடந்தாலும், விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.

இதைத்தொடர்ந்து, வழக்கறிஞர் குமாரதேவன் மூலம், தன்னுடைய பெயரை ரௌடிகள் பட்டியலில் சேர்த்ததற்கான காரணங்களை அறிந்தார் வேடியப்பன். அதில், கொளத்தூர் மணியிடம் தொடர்பு வைத்திருப்பது, அரசு அலுவலர்களை மிரட்டி மாமூல் வாங்குவது, பொதுமக்களைத் திரட்டி அரசு அலுவலகங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, துப்பாக்கிச் சூட்டில் பலியான நக்ஸலைட் தீவிரவாதி நவீன் பிரசாத்துக்கு சிலை வைக்க நிதி திரட்டியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுத் திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் யாரும் வேடியப்பன் மீது புகார் கொடுக்கவில்லை, வழக்கும் பதிவு செய்யப் படவில்லை.

போலீஸாரின் இந்த அராஜகத்தைத் எதிர்த்துத் தான் வேடியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அவர் தரப்பில் வழக்கறிஞர் குமாரதேவன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, ''மனுதாரரின் பெயரை ரௌடிகள் பட்டியலில் சேர்க்கும் ஒரே நோக்கத்துடன் அரூர் இன்ஸ்பெக்டர் செயல் பட்டுள்ளார். அரசியல் சார்பற்ற ஒரு சமூக மாற்றத்துக்கான இயக்கத்தில் பணியாற்றும் ஒருவரை இப்படி உள்நோக்கத்துடன் ரௌடிகள் பட்டியலில் சேர்த்திருப்பதை அவமானகரமான செயலாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. உடனடியாக, அவரது பெயரை ரௌடிகள் பட்டியலில் இருந்து நீக்க டி.எஸ்.பி-க்கு உத்தரவு இடப்படுகிறது'' என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

நல்ல விஷயங்களுக்காகப் போராடுபவர்களைக் கைது செய்யும் பழக்கத்தை போலீஸார் என்றுதான் விடுவார்களோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்