அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், மே 17, 2012

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் புகார்

K M சரீப் 
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பிய பதிமூன்று பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் புகார் செய்தது என்பதை பாப்புலர் ஃபிரண்டின் தேசிய பொது செயலாளர் இன்று பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பின்பும் அவதூறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதால் தான் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக ஒழுங்கு முறை ஆணையத்தை பாப்புலர் ஃபிரண்ட் அணுக நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.
தினிக் சாகரன் ஹிந்தி நாளிதழ்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளேடு
ஐ பி என் ஹிந்தி செய்தி தொலைகாட்சி
டெக்கான் குரோனிக்கில் ஆங்கில நாளேடு
டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சி
நவ பாரத டைம்ஸ் ஹிந்தி நாளிதழ்
தி இன்குலாப் உர்து நாளிதழ்
தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆங்கில நாளிதழ்
தி சண்டே கார்டியன் மற்றும்
பயனீர் ஆங்கில நாளிதழ்
ஆகிய செய்தி ஊடகங்கள் அவதூறு செய்திகளை பரப்பியுள்ளது

நாம் முறையாக சம்மந்தப்பட்டவர்களை அவர்கள் அலுவலகத்திலேயே நேரிடையாக சந்தித்து எழுத்து பூர்வமாக நமது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து நமக்கெதிரான அவதூறு செய்திகளை திரும்பப் பெறுமாறும் தவறுக்காக வருத்தம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டோம். . துரதிர்ஷ்டவசமாக தவறிழைத்தது மட்டுமின்றி தொடர்ந்து நம் மீது சேற்றை வாரியிறைக்கும் அவதூறு பிரசாரத்தை அவை நிறுத்தி கொள்ள தயாரில்லை. மாறாக ஒரு சிலர் நமக்கு எதிராக தாக்குதலை தொடர்ந்து, திருத்தம் வேண்டி நாம் அனுப்பிய சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிசை கண்டுகொள்ளவில்லை என்ற காரணத்தால் தான் நாம் பத்திரிகை நீதிமன்றத்தை அணுக நிர்பந்திக்கப்பட்டோம் என அவர் தெரிவித்துள்ளார் . உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பகர் புர்கி மற்றும் மாரூப் அஹ்மத் ஆகியோர் மூலம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல சைக்கிள் வெடிகுண்டு சம்பந்தம்மாக மதுரையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய தமிழ் நாளிதழ்கள்

மாலை முரசு,
தமிழ் முரசு,
தினகரன் மற்றும்
தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆங்கிலம்
ஆகிய நாளிதழ்களுக்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம் மதுரை பாப்புலர் பிரண்ட் வழக்கு பதிவு செய்துள்ளது என்பதை கே எம் ஷரீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்