பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சை ஆகிய ஐந்து இடங்களில் ஏப்ரல் 22 அன்று நடத்த உள்ளது.
அது சமயம் தமிழகம் முழுவதும் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்த விளக்கப் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், இரு சக்கர வாகனப் பேரணி மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக V.களத்தூரில் ஞாயிறு மாலை 3:30 மணிக்கு V.களத்தூர் பாப்புலர் ஃபிரண்ட் அலுவலகத்தின் அருகிலிருந்து சைக்கிள் பேரணி துவங்கியது. பேரணியை V.களத்தூர் ஜமாஅத் தலைவர் A.கமால் பாஷா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். SDPI மாவட்ட செயலாளர் A.சித்தீக் பாஷா அவர்கள் முன்னிலை வகித்தார்.
இப்பேரணி V.கலத்தூரிலுள்ள மில்லத் நகர் உட்பட எல்லா வீதிகள் வழியாகவும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாப்புலர் ஃபிரண்ட் செயல் வீரர் A.பைசல் அஹமத் அவர்கள் இட ஒதுக்கீட்டின் தேவை குறித்து உரையாற்றினார். இப்பேரணியில் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணி மாலை 5 மணியளவில் முடிவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக