அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

கோவை பாப்புலர் ஃபிரண்ட் நடத்திய மனித சங்கிலி போராட்டம்


சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டு காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இட ஒதுக்கீடு வழங்க மறுத்தல், போலி என்கவுண்டர், பொய் வழக்கு போன்றவற்றை குறிப்பிடலாம். 1990க்கு பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வெளியே விடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த TISS (டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயன்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி மகாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு உதாரணமாகும். 

சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தின் மீதான இது போன்ற பொய்யான நடவடிக்கைகள் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; தவறான அடிப்படையில் சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்! என்ற தலைப்பில் வரக்கூடிய 2012 ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை தேசிய அளவிலான பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி கோவை மாவட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக செப்டம்பர் 15 சனிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிவரை தமிழ்நாடு ஹோட்டல் முன்புறம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.ராஜா ஹுசைன் தலைமையில், மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷானவாஸ், அப்துல் ஹக்கீம், முஹம்மது அலிஆகியோரும், ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைகோர்த்தபடி நின்று மனித உரிமை மீறலைக் கண்டித்து கோஷங்களை  எழுப்பினர். இறுதியாக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் எக்குற்றமும் செய்யாமல் சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகள்  அனைவரும் விரைவில் விடுதலை அடைவார்கள் என்ற நம்பிக்கையில் அனைவரும் களைந்து சென்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்