அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

நிலக்கரி சுரங்க ஊழல்:பா.ஜ.க முதல்வர்கள் தமது பதவியை ராஜினாமாச் செய்து முன்மாதிரியாக மாறவேண்டும்! – எஸ்.டி.பி.ஐ!

நிலக்கரி சுரங்க ஊழல்:பா.ஜ.க முதல்வர்கள் தமது பதவியை ராஜினாமாச் செய்து முன்மாதிரியாக மாறவேண்டும்! – எஸ்.டி.பி.ஐ! 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளியால் முடங்கியதில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பிரதமரின் ராஜினாமாவைக் கோரி அமளியில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சி தாம் ஆளும் மாநில முதல்வர்களை ராஜினாமாச் செய்யவைத்து முன்மாதிரியாக மாறவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “பாரதீய ஜனதா கட்சியின் அமளியால் பாராளுமன்றத்தின் மதிப்புமிக்க 13 தினங்களும், 29 கோடி ரூபாயும் தேசத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை முடக்குவதும் ஜனநாயக நடைமுறை என்ற பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது. மழைக்கால கூட்டத் தொடரால் எவ்வித பலனும் இல்லை. 30 மசோதாக்கள் நிறைவேற்றவேண்டிய சூழலில் மக்களவையில் நான்கும், மாநிலங்களவையில் 3 மசோதக்களும் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவையை முடக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதும், நிராகரிப்பதும் ஆகும் என்ற பிரதமரின் கருத்து சரியானது. பாராளுமன்றத்தை நடைபெற விடாமல் முடக்குவது ஜனநாயகத்தை கடுமையாக மீறுவதாகும் என்ற பிரதமரின் எச்சரிக்கை முற்றிலும் சரியே. தமது கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பங்கு இருப்பது தெளிவான பிறகும் நெருக்கடியில் ஆழ்ந்துள்ள காங்கிரஸ் மற்றும் ஐ.மு அரசை மேலும் நெருக்கடியில் ஆழ்த்தும் முயற்சிகளை பாரதீய ஜனதா கட்சி மேற்கொண்டுள்ளது. இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளியால் முடங்கியதில் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பிரதமரின் ராஜினாமாவைக் கோரி அமளியில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சி தாம் ஆளும் மாநில முதல்வர்களை ராஜினாமாச் செய்யவைத்து முன்மாதிரியாக மாறவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “பாரதீய ஜனதா கட்சியின் அமளியால் பாராளுமன்றத்தின் மதிப்புமிக்க 13 தினங்களும், 29 கோடி ரூபாயும் தேசத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை முடக்குவதும் ஜனநாயக நடைமுறை என்ற பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது. மழைக்கால கூட்டத் தொடரால் எவ்வித பலனும் இல்லை. 30 மசோதாக்கள் நிறைவேற்றவேண்டிய சூழலில் மக்களவையில் நான்கும், மாநிலங்களவையில் 3 மசோதக்களும் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவையை முடக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதும், நிராகரிப்பதும் ஆகும் என்ற பிரதமரின் கருத்து சரியானது. பாராளுமன்றத்தை நடைபெற விடாமல் முடக்குவது ஜனநாயகத்தை கடுமையாக மீறுவதாகும் என்ற பிரதமரின் எச்சரிக்கை முற்றிலும் சரியே. தமது கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் பங்கு இருப்பது தெளிவான பிறகும் நெருக்கடியில் ஆழ்ந்துள்ள காங்கிரஸ் மற்றும் ஐ.மு அரசை மேலும் நெருக்கடியில் ஆழ்த்தும் முயற்சிகளை பாரதீய ஜனதா கட்சி மேற்கொண்டுள்ளது. இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்