அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், செப்டம்பர் 12, 2012

இஸ்லாத்திற்கெதிராக அமெரிக்க படம்: லிபியாவில் மக்கள் கொந்தளிப்பு

அமெரிக்காவின் சாம் பேசிலி என்பவரும், குர்ஆனை எரித்து சர்ச்சைக்குள்ளான பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் இஸ்லாத்தையும் முகம்மது நபியும் விமர்சித்துள்ளதால் படத்தைப் பார்த்த அரேபிய வளைகுடா நாடுகள் கடும் கொந்தளிப்பில் உள்ளது.

நேற்று எகிப்து, லிபியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் முன்பு  முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களுடன் குவிந்த முஸ்லிம்கள், அடி தடியில் ஈடுபட்டனர்.

அமெரிக்க தூதரகத்தை அடித்து நொறுக்கினர். இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து லிபிய இராணுவம் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி மற்ற அமெரிக்கர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றது.

நேற்று செப்ரெம்பர் 11 நியூயார்க் வர்த்தக கட்டடம் தாக்குதல் நினைவு நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைந்து அந்நாட்டின் கொடியை கிழித்து எறிந்து, கருப்புக் கொடியை ஏற்றினர்.

இதையடுத்து உடனடியாக போலீஸார் விரைந்து வந்ததால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்