சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை |
அமலபுரம், ஆந்திரப் பிரதேசம்: கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள அமலபுரம் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை சேதப் படுத்தப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநிலப் பொதுச் செயலாளர் D.S.ஹபீபுல்லாஹ் அவர்கள் வன்மையாகக் கண்டிதுள்ளர்கள். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக் கொண்டார். Dr.பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் தலித் சமூகத்திற்கு மட்டும் பிரதிநிதி இல்லை. இந்திய குடியுரிமைச் சட்டத்தை வகுத்துத்தந்த அந்த மேதையை அனைத்து சமூக மக்களும் மதிக்க வேண்டும்.
ஜனவரி 23 அன்று அடையாளம் தெரியாத சில விசமிகளால் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்ட செய்தி பரவ ஆரம்பித்ததும் அமலபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பதட்டம் நிலவ ஆரம்பித்தது. கபூ சமூகத்தினரால் நடத்தப்பட்டு வரும் வியாபார நிறுவனங்களை தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மூடச் சொன்னதால், இரு சமூக மக்களும் எதிரெதிராக கல்வீசத் துவங்கினர். இது அமலபுரம் நகரை கலவர பூமியாக்கியது. காவல் துறை தலையிட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவலர்களை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.
எதிர்ப்புக் குரல் கொடுத்த மக்கள் |
அன்று காலையில், நகரின் பல பகுதிகளிலும் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு சிதறிக் கிடப்பதை மக்கள் அறியத் துவங்கியதும் பிரச்சினை வெடித்தது. சுமார் 2 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திலுள்ள எல்லா அம்பேத்கர் சிலைகளும் உடைக்கப்பட்டோ, தகர்க்கப்பட்டோ மண்ணில் வீழ்த்தப்பட்டு இருந்தது. பந்தவீதி பகுதியிலுள்ள சிலை சாக்கடையில் வீசப்பட்டு இருந்தது. ஆனால், ரல்லபலம் பகுதியிலுள்ள சிலையைக் காணவில்லை.
செய்தி காட்டுத் தீயைப் போல பரவத் துவங்கியதும், பல்வேறு தலித் அமைப்புகளின் தலைவர்களும், ஆர்வலர்களும் பெருமளவில் குவியத் துவங்கி சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, கடைகளை அடைக்கச் சொல்லி முழுஅடைப்பு நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால், கபூ சமூக மக்கள் முழு அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தனர். இதனால் கோபமடைந்த சில தலித் இளைஞர்கள் சவுக்குக் கட்டைகளை கடைகளை நோக்கி வீசினர். பதிலுக்கு இவர்களை நோக்கி கற்கள் வீசப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் கல்மாரி பொழியத் துவங்கினர். அருகிலிருந்த காவலர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தனர்.
பெரும்பாலான கடைகள் கபூ சமூகத்தவர்களுக்கு உரியது. தங்களின் கடைகள் மட்டுமே குறிவைத்து தாக்கப்படுவதை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை என்று நல்ல வண்டென பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் குறிப்பிடுகிறார். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகவே, அருகிலுள்ள பகுதிகளிலிருந்தும், காக்கிநாடாவிலிருந்தும் கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன. மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட SP திரிவிக்ரம் ஷர்மா கூறினார். சிலை தகர்ப்பு சம்பந்தமாக புலனாய்வு செய்ய கூடுதல் DG கிருஷ்ணா ராஜு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் காவலர்கள் |
காங்கிரசுக்கு பெரும் வாக்கு வங்கியாக இருக்கும் தலித்துகளின் உரிமைகள் மீறப்படுவதை கண்டு கொள்ளாமல் இருக்கும் குலாம் நபி ஆசாத் அவர்களுக்கு எதிராக அமலபுரம் MP ஹர்ஷா குமார் குற்றம் சாட்டியதை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு பிறகு அமைதி திரும்பியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக