82-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முஹம்மது சலீம் அவர்களின் முயற்சியால் கடந்த 40 ஆண்டுகாலமாக சாலை வசதியின்றி அவதிப்பட்டு வந்த மூன்று தெருக்களுக்கு சிமெண்ட் கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை கோட்டை மேடு வின்சென்ட் சாலை மாலை முரசு அலுவலகத்திற்கு அருகிலுள்ள 3 சந்துகளுக்கு சிமெண்ட் கான்க்ரீட் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
பணிகளைப் பார்வையிடும் மாமன்ற உறுப்பினர் முஹம்மது சலீம் |
பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர்களிடமும், சட்ட மன்ற உறுப்பினர்களிடமும் தொடர்ந்து முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் தற்போது 82-வது வார்டு மாமன்ற உறுப்பினராகியிருக்கும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியைச் சேர்ந்த முஹம்மது சலீம் பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறார். பல தசாப்தங்களாக முறையிட்டும் நடக்காத பணிகள் தற்போது நடைபெறுவதை கண்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக