அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஆகஸ்ட் 03, 2011

ரமழான் - 3

ரமழானை திட்டமிட்டு அனுபவிப்போம்  ! 

 

தனி நபர் திட்டமிடல்

  

  • சுன்னத்தான தொழுகைகளில் சிறப்பு கவனம் செலுத்துதல்.


  • ஐந்து நேரமும் ஜமாத்தாக தொழுதல் / தொழுவித்தல்.


  • அல்குர்ஆனை முழுமையாக ஒரு முறையாவது ஓதுதல்.


  • அல்குர்ஆனின் ஒரு ஜுஸ்உ வையாவது மனனம் செய்தல். (30வது ஜுஸ்உ)


  • முன்பே மனனம் செய்த வசனங்களை, சூராக்களை மீட்டல்.


  • பொருளுணர்ந்து சுயமாக தர்ஜூமா வசித்தல்.


  • எந்நேரமும் சிறிய அல்குர்ஆன் பிரதியை வைத்துக் கொள்ளல்.


  • ஸுப்ஹ் தொழுகையின் பின் தூங்குவதை இயலுமான வரை தவிர்த்தல்.


  • அரபு மொழியில் புதிய 300 சொற்களை மனனம் செய்தல்.


  • புதிய பத்து நுல்களையாவது வசித்தல்.


  • இரண்டு கட்டுரைகளையாவது ஊடகங்களுக்கு அனுப்புதல்.


  • அல்லாஹ் வெறுத்த விஷயங்களை விட்டும் உடலுறுப்புக்களை குறிப்பாக நாவைப் பாதுகாத்தல். (பொய், புறம் போன்ற தீய செயல்கள்)


  • அதிகமாக  தஸ்பீஹ், தவ்பா போன்றவற்றில் ஈடுபடுதல்.


  • தானதர்மம் செய்தல்.


  • வசதிகளிருப்பின் கம்ப்யூட்டர், ஆங்கில அறிவுகளை விருத்தி செய்து கொள்ளல்.


  • காலை மாலை திக்ருகளைப் பேணுதல்.


  • அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய துஆ, திக்ருகளைப் பேணுதல். 


  • லைலதுல் கத்ரை அடைய முயற்சித்தல்.

குடும்பத் திட்டமிடல்  

  • குடும்பத்தினருக்கான ரமழான் நேர அட்டவணையை தயாரித்துக் கொடுத்தல்.

  • குடும்பத்தினரின் இபாதத் விசயங்களில் கூடிய கவனம் செலுத்துதல்.

  • வீட்டாருடன் சேர்ந்து காலை, மாலை திக்ருகளைப் பேணுதல்.

  • பொருத்தமான பெரு புத்தகத்தைத் குடும்பத்தாருக்கு கற்றுக் கொடுத்தல். (ரஹீக், வாழ்க்கை கலை போன்றன)
  • வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு இஸ்லாத்தின் சட்டங்களை எடுத்துரைத்தல்.

  • வீட்டு வேலைகளை பிரித்துக் கொள்ளல்.

  • தினமும் குர்ஆன் தர்ஜுமாவை வாசித்து முடியுமான அளவு விளக்கம் கூறுதல்.
  • அல்குர்ஆனை மனனம் செய்ய வீட்டாருக்கு ஆர்வம் ஊட்டி வழிகாட்டுதல்.

  • கிராஅத்களை வீடுகளில் ஒலி பரப்புதல்.

களத் திட்டமிடல்


  • நண்பர்களுடன் வாரம்ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளல்.

  • உறவினர், அயலவர், நண்பர் போன்றோருக்கு இப்தார் ஏற்பாடுகளை செய்தல்.
  • பத்து நபர்களுக்காவது தஃவா மடல் அனுப்புதல்.

  • எஸ்.எம்.எஸ். மூலம் பரஸ்பர அன்பை பரிமாறிக் கொள்ளுதல்.

  • ஈ-மெயில் வசதியிருந்தால் அதன் மூலம் நல்ல தகவல்களைப் பரிமாறல்.

  • அருகிலுள்ள பத்து நபர்களுக்காவது சிறந்த வழிகாட்டலை வழங்குதல்.

  • ரமழானை சிறப்பாகத் திட்டமிட நண்பர்களுக்கு வழிகாட்டுதல்.

ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்க்கையிலும் திட்டமிடுதல் மிகவும் அவசியமாகும். எனவே, மேற்கூறப்பட்ட குறிப்புகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு முஸ்லிமும் ரமழான் நேர அட்டவணையை மிகவும் நுணுக்கமான முறையில் தயாரித்துக் கொள்வதன் மூலம் சிறந்த பலன்களை அடைய முடியும.

எனவே, இப்புனித ரமழானின் பூரண பயனை அடைந்து கொள்ள நாம் அனைவரும் முயற்சிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்