அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

ரமழான் - 1

நீ மாத்திரம் வந்து செல்லாவிட்டால்...


வருடம் ஒருமுறை வந்து செல்லும் ரமழான் எனும் வசந்த காலம் தோன்றாமலே இருந்திருக்குமானால்... நிச்சயமாக நமது வாழ்வில் பூத்துக் குலுங்க வேண்டிய பல் நிற மலர்களும் பல்சுவை கனிகளும் வரட்சியினால் வடிப்போயிருக்கும்.

ரஹ்மத் எனும் அருள் மழையை அள்ளிச் சொரியும் இம்மாதம் வாழ்விலே வராது விட்டால்... மனித உள்ளங்களில் ஆன்மீகம் வற்றி வறண்டு போயிருக்கும். பூமியிலே இருக்கும் ஆறுகள், குளங்கள், கிணறுகள் அனைத்தையும் நிரப்பிவிடுச் செல்லும் அருள்மழைபோல், மனித உள்ளதை ஆன்மீகத்தால் நிரப்பி, அவனது ஐம்புலன்களையும் கழுவித் துடைத்து தூய்மையாக்கிச் செல்கிறது ரமழான்.

மனித வாழ்விற்கு அவசியமான அனைத்து வழிகாட்டல்களையும் முழுமையாக அல்குர்ஆன் முலம் தந்த அல்லாஹ், அது உலகிற்கு இறக்கிய மதமான ரமழானை கண்ணியப்படுத்துவதற்காக முழுமாத நோன்பை விதித்துவிட்டான். வயிறார உண்ணக் கொடுத்து கண்ணியம் பண்ணுவதுதான் மனித இயல்பு. ஆனால் அல்குர்ஆன்  மதிமயங்கிய உள்ளங்களுக்கான மருந்து அல்ல, மாறாக, பசித்திருந்து, விழித்திருந்து, தனித்திருந்து கூர்மயாக்கப்பட்ட புலன்கள் முலம உட்சென்று வற்றியிருக்கும் உள்ளங்களை நிரப்பி ஓராண்டு வரை அள்ளிப் பருகி திளைத்திருக்க வேண்டிய ஒன்று என்பதனால் பட்டினி கிடந்து கண்ணியமளிக்கும்படி பணிந்துள்ளான் அல்லாஹ்.

ஓ! புனித ரமழானே! 
நீ வழங்கிச் செல்லும் வசந்தகால உணர்வுகள் வாழ்வு முழுவதும் ரீங்காரமிட்டு, சுவனத்தின் கதவுகளை திறந்து செல்கின்றனவே! 
அல்குர்ஆன் எனும் அருள்பொக்கிஷம் பிரிக்கப்பட்டு, விலாவரியாக அலசப்படுகின்றதே! 
அழுக்காறுகள் அனைத்தையும் அலசிக் கழுவி, வெள்ளை உள்ளங்களை விதைத்துச் செல்கின்றாயே! 
நீ மாத்திரம் எம் வாழ்வில் வந்து செல்லாவிட்டால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்