பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த மூன்று வருடங்களாக சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. இந்த வருடம் சுதந்திர தின அணிவகுப்பை மேலப்பாளையத்தில் வைத்து நடத்துவதாக அறிவித்துள்ளது.
இதனை பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் A.ஹைதர் அலி அவர்கள் நமது நிருபர்களிடம் கூறியதாவது ”சுதந்திரம் என்பது நமது உரிமை அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். நாம் இப்பொழுது 65 -வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாமெல்லாம் தயாராகி வருகிறோம். கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3- ஆண்டுகளாக சுதந்திரதின அணிவகுப்பை நடத்தி வருகிறது. இவ்வருடமும் ஆகஸ்டு 15 ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த தீர்மானித்துள்ளோம்.
சுதந்திரப் போரில் ஆணிவராய் இருந்தவர்களையும், போராட்டக் களத்தில் உயிர் நீத்த தியாக செம்மல்களையும் நினைவு கூறவேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். உடல் வலிகளையும், உயிர் அற்பணிப்புகளையும், பொருட்படுத்தாது போராடிப் பெற்ற சதந்திரத்தை ஆகஸ்ட் 15 -ல் மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் தேச வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்ட உள்ளத்துடனும் கொண்டாட வேண்டும்.
இவற்றை வெளிப்படுத்திடும் விதத்தில் தான் சுதந்திர முழக்கமிட்டு, வீர நடைபோட்டு பாப்புலர் ஃப்ரண்ட் -ன் சீருடை அணிந்து சதந்திர தின அணிவகுப்பை கொண்டாடி வருகின்றது. இந்திய வளங்கள் நவீனப் பெயர்களில் அந்நியர்களுக்கு தாரை வார்க்கப்படுவதும், தேச குடிமக்கள் வேலையின்றி அடிமை குடிமக்களாக மாற்றப்படும் அவல நிலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஊழலுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளும், கடுமையான தண்டனைகளும் அமலாக்கப்பட வேண்டும்.
அரசியலுக்காக தேசத்திற்க்குள்ளேயே குண்டு வெடிப்புகளையும் கலவரங்களையும் ஏற்ப்படுத்தி மாற்றானை குற்றம் சுமத்தி, தேசபக்தி வேடமிட்டு அரசியலில் பிழைப்பு நடத்திவரும் சங்கப்பரிவார பாசிஸ்டுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவு கூர்ந்திடவும், தியாகிகளை கெளரவித்திடமும், இதைக் கண்டு குடிமக்கள் மகிழ்ந்திடவும் போதிய உரிமைகள் வழங்கப்படவில்லை. சுதந்திரத்தின் நினைவலைகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கொண்டடி மகிழ்ந்திடும் நிலையை ஏற்ப்படுத்திட மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்புரிந்து வரும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
மக்களின் மகிழ்ச்சிக்கு அரசு நிச்சயமாக உறுதுணையாக இருக்குமென்றும் நம்புகிறோம். இவ்வருடத்தின் சுதந்திரதின அணிவகுப்பில் வீறு நடைபோட்டு, போர்பரணி எழுப்பி, வீர முரசு கொட்டி நீதியின் போராளிகளாக, சுதந்திரத்தின் பாதுகாவகர்களாக பாப்புலர் பிரான்ட்- ன் 1000 செயல் வீரர்கள் அணிவகுக்க உள்ளனர். சுதந்திர தினத்தை அணிவகுத்து கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
மேலப்பளையத்தில் கலைகட்டிய அணிவகுப்பு ஏற்பாடுகள் |
மேலப்பாளையத்தில் நடைபெறும் அணிவகுப்பு ஜின்னா திடலில் தொடங்கி பஜார் வழியாக சென்று ஹாமீம் புரம் 7வது தெருவில் முடியும் என அவர் தெருவித்துள்ளார். மேலப்பாளையத்தில் இதுவரை எந்த ஒரு அணிவகுப்பும் நடந்ததில்லை, தற்போது நடைபெறவிருக்கும் இந்த அணிவகுப்பு மேலப்பாளையம் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக