அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

ரமழான் - 21

இஃதிகாஃபின் சட்டங்கள்


இஃதிகாப்
என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல் என்ற பொருளாகும் இஸ்லாமியவழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்து தங்குவதற்கு சொல்லப்படும்.

இஃதிகாபும் அதன் வகைகளும்.

1.நன்மையை நாடி சிறிது நாட்கள் அல்லது சிறது நேரம் அல்லது ரமலானில்கடைசி பத்தில் தங்குதல் போன்றைவைகள் சுன்னத்தாக இருக்கிறது.

2 எனது இந்த தேவை நிறைவேறினால் நான் பள்ளியில் குறிப்பிட்ட நாள்தங்குவேன் என்று என்னி நேர்சை செய்வது இது கடமையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் தமது வீட்டில்தொழுவதை விடவும் கடைவீதியில் தொழவதை விடவும் ஜமாத்துடன் தொழுவதுஇருபத்தி ஏழு ஐந்து மடங்கு மதிப்பில் சிறந்ததாகும். உங்களில் ஒருவர் உலூசெய்து அதை அழகுறச்செய்து தொழுகின்ற நோக்கத்தில் பள்ளிவாசலுக்குவந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொருஎட்டுக்கும் அவருக்கு படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகிறான். ஒரு பாவத்தைவிட்டும் நீக்குகிறான் தொழுகையை எதிர்பார்த்து பள்ளிவாசல் அமர்ந்திருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராக கருதப்படுகிறார். தொழுத இடத்திலேஅவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்கு தொல்லை அளிக்காத வரையில்இறைவா இவரை மன்னித்து விடு இவருக்கு அருள் புரி என்று வானவர்கள்கூறுகின்றனர்.
­
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
(நூல் புகாரி 477)


இப்னு உமர் (ரலி­) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதரே மஸ்ஜிதுல்ஹரமில் ஒரு இரவு இஃதிகாப் இருப்பதாக அறியாமைக்காலத்தில் நான் நேர்சைசெய்திருந்தேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உம் நேர்ச்சையை நிறைவேற்றும் என்றார்கள் உமர் (ரலி) ஒரு இரவுஇஃதிகாப் இருந்தார்கள்.

(நூல் புகாரி 2042)

இஃதிகாப் காலத்தின் ஆரம்பமும் முடிவும்.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடியால் பஜ்ரு தொழுகையைமுடித்துவிட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.

(நூல் முஸ்ம் 2007)
­

அபூஸயீத் (ரலி) கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின்நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள் இருபதாம் இரவுகழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம்திரும்புவார்கள்.(சுருக்கம்)

(நூல் புகாரி 2018)

இஃதிகாப் இருப்பவருக்கு ஆகுமானவை.

1.அவசிய தேவைக்காக வெளியே செல்லுதல்.

ஆயிஷா (ரலிகூறியதாவது நபி ஸல் அவர்கள் பள்ளியில் இஃதிபாக் இருக்கும்போது தமது தலையை வீட்டிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான்வாருவேன் இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள்வரமாட்டார்கள்.
­
(நூல் புகாரி 2029)

இதிருந்து அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்றும் பள்ளியில்தங்கும் போது தலைவாரலாம் என்றும் அறிய முடிகிறது.

2.தேவை ஏற்படும் போது பள்ளிவாசவில் பேசிக்கொண்டிருக்கலாம்.

ஸபிய்யா (ரலி) கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசி பத்துநாட்களில் இஃதிகாப் இருக்கும் போது அவர்களை நான் செல்வேன் சற்று நேரம்அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன் (ஹதிஸின் சுருக்கம்)
­
(நூல் புகாரி 2035)

இதிருந்து அவசிய தேவை ஏற்பட்டால் மனைவிமார்களுடனும் பேசலாம்என்பதும் இஃதிகாப் உள்ளவர்களை சந்திக்க செல்லலாம் என்றும் வந்தவர்களைவாசல் வரை வந்து வழியனுப்பலாம் என்றும் விளங்க முடிகிறது.

3. பள்ளியில் கூôரத்தை அமைத்துக்கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) கூறியதாவது
நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப்பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான்அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன்.(சுருக்கம்)
­
(நூல் புகாரி 2033)

இஃதிகாப் இருப்பவருக்கு தடுக்கப்பட்டவைகள்.

1.பள்ளிவாசல் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்குஅனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்குஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத்தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைசந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர்இரவு வரை நோன்பை முழுமைப் படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப்இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனதுவசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
­ (­
(அல்குர்ஆன் - 2:187)

அதுமட்டுமில்லாமல் இச்சைக்கு தூண்டக்கூடிய எந்தக்காரியத்தையும்செய்யக்கூடாது ஏனென்றால் இஃதிகாபின் நோக்கத்திற்கு விரோதமானதாகும்.

2.தேவையில்லாமல் பள்ளியைவிட்டும் வெளியே செல்லக்கூடாது.

ஆயிஷா (ரலி) கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும்போது தமது தலையை வீட்டிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான்வாருவேன் இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள்வரமாட்டார்கள்.
­
(நூல் புகாரி 2029)

3.நோயாளியை சந்திக்கவோ ஜனாஸாவை பின்தொடரவோ கூடாது.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது நோயாளியின் அருகே நிற்காமல்நடந்தவர்களாக நலம் விசாரிப்பார்கள்

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
(நூல் அபூதாவூத் 2114 மாக் 606)
­

இந்த ஹதிஸ் நோயாளியை விசாரிக்கச்செல்லாம் என்று அறிவித்தாலும்நிற்காமல் விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறது என்றாலும் இந்த ஹதிஸின்அறிவிப்பாளர் தொடரில் லைஸ் பின் அபீசுலைம் என்பவர் இடம் பெற்றுள்ளார்இவரைப்பற்றி அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.

(மீஸானுல் இஃதிதால் பாகம் 5 பக் 509)

இஃதிகாப் இருப்பவர் ஜனாஸாவை பின் தொடருவார் இன்னும் நோயாளியையும்சந்திப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அனஸ் பின் மாக் (ரலி)
(நூல் இப்னு மாஜா 1767)
­

ஆனாலும் இந்த செய்தியில் நிறைய குறைபாடுகள் இருக்கிறது இதில் இடம்அல்ஹய்யாஜ் குராஸானி மேலும் அன்பஸா பின் அப்திர்ரஹ்மான் அப்துல் காக்போன்றோர் குறை கூறப்பட்டவர்கள்.

நோயாளியை விசாரிக்கச் செல்லாமலும் ஜனாஸாவில் கலந்து கொள்ளாமலும்மனைவியை தொடாமலும் அவளிடத்தில் இல்லறத்தில் ஈடுபடாமலும் அவசியதேவைக்காக தவிர மற்றவைகளுக்கு வெளியே வராமல் இருப்பது இஃதிகாப்இருப்பவர் மீது சுன்னத்தாகும் இன்னும் நோன்பு இல்லாமல் இஃதிகாப் இல்லைதொலுகைக்காகமக்கள் கூடுகின்ற (பெரிய) பள்ளியைத் தவிர மற்ற பள்ளியில்இஃதிகாப் இல்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.
­
(நூல் அபூதாவூத் 2115)

இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்தாலும் ஆயிஷா (ரலி) கூற்றாக இதுஅறிவிப்படுகிறது. என்றாலும் புகாரியில் ஆதாரப்பூர்வமான செய்தி ஒன்றில் நபிஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள்வரமாட்டார்கள்.
(
(நூல் புகாரி 2029)

இந்த ஹதிஸில் கூறப்பட்டதைதவிர மற்றவைகளுக்கு வெளியேவரமாட்டார்கள் என்று அறுதியிட்டு கூறுவதனால் மய்யித்தை குளிப்பாட்டவோபின்தொடரவோ கூடாது அதே நேரத்தில் ஜனாஸாத்தொழுகை பள்ளிவாசல்வைத்து நடக்கும் தொழுகையில் கலந்து கொள்ளலாம் அதில் எந்த தவறும்இல்லை.
பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?

இன்னும் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின்மனைவிமார்கள் இஃதிகாப் இருந்தார்கள் என்று புகாரி ஹதிஸ் நமக்குஅறிவிக்கிறது.

நபி ஸல் அவர்கள் (ஒரு ரமலான் மாதம்) இஃதிகாப் இருக்க நாடினார்கள் நபி ஸல்அவர்களோடு இஃதிகாப் இருக்க ஆயிஷா (ரலி) அனுமதி கேட்டார்கள் அனுமதிகிடைத்தவுடன் ஒரு கூடாரத்தை ஏற்படுத்தினார்கள் பின்பு ஹப்ஸா (ரலி) ­ அனுமதி கேட்டார்கள் அவருக்கும் அனுமதி வழங்கினார்கள் ஸைனப்அனுமதியில்லாமல்) கூடாரத்தை ஏற்படுத்திருப்பதை பார்த்தவுடன்

இந்த ஹதிஸில் ஸைனப் (ரலி) அவர்கள் அதிக ரோஷமுள்ளவர்களாக இருந்தகாரனத்தினால்தான் அகற்றச்சொன்னார்கள் என்பது தெளிவாகின்றது எனவேபெண்கள் கணவர் துனைவுடன் இஃதிகாப் இருக்கலாம் மார்க்கத்தில் இதற்கு எந்ததடையும் இல்லை
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்