அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, ஆகஸ்ட் 13, 2011

ரமழான் - 13

நோன்பை விடுவதற்குரிய காரணங்கள
  • நோயினால், நோன்பாளிக்கு நோய் முற்றி இடையூறு ஏற்படும் என்று கருதினால் அல்லது நிவாரணம் பெற காலதாமதம் ஏற்படும் என்று அல்லது நோன்பு வைத்தால் கடுமையான சிரமம் ஏற்படுமானால் அப்போது நோன்பை முறிப்பது கூடும்.
  • கடும் விளைவு ஏற்படும் என்று கருதினால் (தனது உறுப்புகளில் ஏதேனும் ஒன்று பாதித்துவிடும் என்று கருதுவது போல்) அப்போது நோன்பை முறிப்பது கடமை. நோன்பு வைப்பது ஹராம். (இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் ஹனஃபி (ரஹ்))
  • கர்ப்பிணி-பாலூட்டும் தாய் நோன்பு வைப்பதால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று கருதினால் இருவரும் நோன்பை விட்டுவிடலாம். தாய்-சேய் அல்லது தாய்-அல்லது-சேய் ஆகியோரின் அச்சத்திற்காக வேண்டி நோன்பை விட்டுவிடலாம். எவ்வித குற்றப்பரிகாரமும் இன்றி வேறொரு நாளில் களா செய்து கொள்ளலாம். “களா” செய்யும்போது தொடராக நோன்பு வைக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் கிடையாது.பாலூட்டும் பெண் தாயாக இருந்தாலும் சரி அல்லது வாடகை தாயாக இருந்தாலும் சரி சட்டம் இருவருக்கும் பொருந்தும். (இமாம் ஹனஃபி (ரஹ்))
  • கர்ப்பிணி-பாலூட்டும் தாய்  தனது உயிரை அல்லது குழந்தையின் உயிரை பயந்தால் விட்டுவிடுவது கடமை.மூன்று நிலைகளிலும் அவ்விருவரும் “களா “ செய்து கொள்ள வேண்டும். ஆனால் குழந்தைகள் மீது மட்டும் அச்சப்பட்டு நோன்பை முறித்துக் கொண்டதற்கு மட்டும் குற்றப்பரிகாரத்துடன் “களா” செய்வது கடமை.
  • தாய் – வாடகைத்தாய் இருவரும் சமமானவர்களே. குற்றப்பரிகாரமாகிறது. களாவின் நாட்களைக் கணக்கிட்டு ஒவ்வொரு நாளும் மிஸ்கீனுக்கு உணவு வழங்குவதாகவும்.
  • பிரயாணிக்கு நோன்பை விடுவது அனுமதிக்கப்படும்.அதாவது, தொழுகையை சுருக்கித் தொழுவதற்கு அனுமதிக்கபட்ட தொலைதூரத்திற்கு அமைந்திருப்பது நிபந்தனை.
  • பஜ்ருக்கு முன் பயணம் தொடங்கி பஜ்ருக்கு முன் தொழுகை கஸ்ராகும் இடத்தை அடைந்திருக்க வேண்டும். கஸ்ரு தொழுகைக்கு அனுமதியற்ற பயணத்தில் நோன்பை விட்டுவிட அனுமதியில்லை. ஆனால் இமாம் ஷாபி (ரஹ்மாதுல்லா ஹி அலைஹி) மூன்றாவதாக ஓர் நிபந்தனையை  அதிகப்படுத்தினார்கள். அதாவது தொடர் பயணியாக இல்லாமலிருத்தல், தொடர் பயணியாக இருந்தால் நோன்பை விட்டுவிடுவது ஹராம். பயணத்தில் கடும் கஷ்டம் ஏற்ப்பட்டால் மட்டுமே நோன்பை விடுவது வாஜிபு.
  • பஜ்ருக்கு பின் பயணிக்கத் தொடங்கினால் நோன்பை விடுவது ஹராம். இனி நோன்பை முறித்தால் களா செய்ய வேண்டும். கஃபாரா வேண்டியதில்லை. (இமாம் ஹனஃபி (ரஹ்))
  • பஜ்ருக்கு பின் பயணம் செய்தவர் நோன்பை முறித்தால் “களா” கடமை.கப்பாராவை ஏற்ப்படுத்தும் விதத்தில் நோன்பை முறித்திருந்தால் இரண்டும் வாஜிப் ஆகிவிடும். “களா”வை மட்டும் ஏற்படுத்தும் விதமாக நோன்பை முறித்திருந்தால் “களா” மட்டும் வாஜிபு. எப்போதுமே நோன்பை முறிப்பது ஹராம். (இமாம் ஷாஃபி (ரஹ்))
  • பயணத்தில் இரவில் நோன்பை நிய்யத் செய்தவர் நோன்பை முறிப்பது ஹராம். அவ்வாறு முறித்தால் களா செய்ய வேண்டும். கஃப்பாரா இல்லை. (இமாம் ஹனஃபி (ரஹ்))
  • பயணத்திலிருப்பவர் இரவில் நோன்பு நிய்யத் வைத்தபின் நோன்பை விடுவது கூடும் . எவ்வித குற்றமும் இல்லை. ஆனால்”களா” செய்ய வேண்டும்.
  • பயணி நோன்பு வைப்பதால் சிரமம் ஏற்படாதிருந்தால் நோன்பு வைப்பது நல்லது. (இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் ஹனஃபி (ரஹ்))

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்