அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

ரமழான் - 14

நோன்பு தரும் ஆரோக்கியம் - 1

நோன்பு அல்லாஹ்வுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நெருகமாக்கி வைக்கிறது; தக்வாவை அதிகரிக்கச் செய்கின்ற ஒரு மூலகாரணி; இன்னும் நோன்பின் மூலம் பரகத், பாவமன்னிப்பு, நரக விடுதலை, ஒரு பர்ளுக்கு எழுபது மடங்கு நன்மை அதிகரிப்பு, ஒரு சுன்னத்துக்கு ஒரு பர்ளு நிறைவேற்றிய கூலி என்றெல்லாம் பல ஆன்மீக பயன்பாடுகளை நோன்பு தருகின்றது.
நோன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த ஏனைய சமுதாயத்தினருக்கும் கடமையாக்கப்பட்டிருந்தது. இதன் மருத்துவவியல் பயன்பாட்டை மருத்துவ மேதை இப்னு சீனா பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

”நோன்பானது நீண்டக்கால நோய்களுக்கு நிவாரணியாகும். மூன்று மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்பதால் பெரியம்மை, சிபில்ஸ் போன்ற கொடிய நோய்கள் குணமாகின்றன.” 

இவ்வாறான எகிப்திய வைத்தியசாலைகளில் நோயாளிகளைத் தங்க வைத்து நோன்பின் மூலம் நிவாரணமளிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக உண்ணாமலும் பருகாமலும் குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் இருப்பதனால் வளர்ப்பு நோய், உடம்புகளில் ஏற்படும் கொப்புளங்கள் போன்றவை குணமாகின்றன என்று ஜெர்மானிய வைத்திய நிபுணர் ‘பரீத் ரைகஹூப்பமான்’ குறிப்பிடுகின்றார்.
மேலும் கண்களைத் தாக்கும் இரத்தப் புற்றுநோய், முரசு வீக்கம், கண் இமை சார்ந்த நோய்கள் நோன்பின் மூலம் குணமடைகின்றன. எந்த நோய் குணமடைய வேண்டுமோ அதற்காக மேற்கொள்ளப்படும் முதல் பரிகாரம், நோயாளி எதனையும் சாப்பிடக்கூடாது என்பதே மருத்துவர்களின் ஆலோசனையாகும்.
இஸ்லாம் நோன்பு நோற்கும் கால எல்லையை 1114 மணித்தியாலங்களாக வரையறுத்துள்ளது. இந்த அளவை விட கூடுதலான கால அளவை எடுக்குபோது உடல் ஆரோக்கியம் பாதிப்படைகின்றது என்ற உண்மையை இஸ்லாம் குறிப்பிடத்தவரவில்லை. 

ஏனைய வணக்க வழிப்பாடுகள் மூலமாக பல உடலியல் ரீதியான பயன்பாட்டை பெற முடிவதைப் போல அதிகமான பயன்பாடுகளை நோன்பின் மூலம் அடைந்து கொள்ள முடிகின்றது.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்