அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, ஆகஸ்ட் 06, 2011

சுப்பிரமணியம் சுவாமியை கண்டித்து கோவையில் SDPI ஆர்ப்பாட்டம்


ஜனதா கட்சியின் தலைவர் என்று சொல்லப்படுகிற சுப்பிரமணியம் சுவாமி என்பவர் மும்பையிலிருந்து வெளிவரும் DNA என்ற ஆங்கில நாளிதழில் ஜூலை 16 அன்று முஸ்லிம்களுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு துரோகம் இழைக்கும் வகையிலும் எழுதியதைக் கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரியும் கோவை மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆகஸ்ட் 5-இல் மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)இன் செயலாளர் A.J.அப்துல் கரீம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI)வின் கோவை மாவட்ட தலைவர் V.M.அபுதாகிர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்க வேண்டும், பண்டிட்டுகளை மீண்டும் குடியமர்த்த வேண்டும், காசியிலுள்ள மஸ்ஜிதை தகர்க்க வேண்டும், மேலும் 300 பள்ளிவாசல்களை தகர்க்க வேண்டும், பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும், மற்ற மதத்தினர் இந்துக்களை தங்களின் மூதாதையர் என ஒப்புக்கொண்டால் மட்டுமே அவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும், இந்தியா என்ற பெயரை இந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும், இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாற சட்ட ரீதியாக தடை விதிக்க வேண்டும், இந்துத்துவ பிரச்சாரத்தை பரப்ப வேண்டும் என்றும் விசமத்தனமாக எழுதியிருந்தார்.


ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணியம் சுவாமியை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உமர் சரீப் (கிணத்துக் கடவு தொகுதி தலைவர், SDPI) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள், செயல் வீரர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

மேலும்  புகைப்படங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்