அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, ஆகஸ்ட் 20, 2011

இந்திய சுதந்திரப் போராட்டமும், முஸ்லிம்களும் - 20

வரி தர மறுத்த மாவீரர் உமர் காஸி

அல்லாஹ் படைத்த பூமிக்கு நான் ஏன் வரி தர வேண்டும், வரி தர மாட்டேன் உங்களால் என்ன செய்ய முடியுமோ? அதை செய்யுங்கள். என்று தம்முடைய நிலத்திற்கு வரி கேட்டு வந்த ஆங்கிலேய அதிகாரிகளிடம் துணிச்சலுடன் பதில் உரைத்தார். இந்த போராளி  உமர் காஸி .

நமது சொந்த நிலத்திற்கு ஏன் அந்நியனுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற கேள்வி உமர் காஸியின் மனதை உருத்திக்கொண்டே இருந்தது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்பு முனை என கருதப்படும் மகாத்மா காந்தி நடத்திய வரி கொடா இயக்கம் பற்றி நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் ஓர் நூற்றாண்டுக்கு  முன்னரே அந்நியனுக்கு வரி கொடுக்க மாட்டேன் என்று சபதமேற்று மக்களிடம் நேரடியாக பிரச்சாரமும், போராட்டமும் நடத்திய இந்த வீரத்திருமகன் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு கடும் சவாலாக திகழ்ந்தார். என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்!.

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி தாலூகாவில் வெளியங்கோடு கிராமத்தில்  1765 ல் உமர் காஸி பிறந்தார். 

இவரது முன்னோர்கள் மேற்கு கடலோரப்பகுதிகளில் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரத்திற்கு வந்த குழுவை சார்ந்த மாலிக் இப்னு ஹபீபின் தோழரான ஹஸனத் தாபீயீ என்பவரின் வாரிசான அலி முஸ்லியார் தான் உமர்காஸியின் தந்தை.  

இவர் தந்தையிடம் ஆரம்பக் கல்வியையும், பொன்னானியில் மாஊனத்துல் இஸ்லாம் சபை என்ற கல்வி நிறுவனத்தில் உயரக் கல்வி கற்றார். அங்கு அவரது ஆசிரியர் மம்முகுட்டி முஸ்லியாரின் அன்பு சீடரானார். ஆசிரியர் மறைவுக்குப்பிறகு பொலிவிழந்த கல்வி நிறுவனத்தை புதுப்பித்து அங்கு தலைமை ஆசிரியாராகாவும் உமர்காஸி பணியாற்றினார்.

கல்வி நிலையத்தில் மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியோடு பிரிட்டிஷ் எதிர்ப்பு அவசியத்தையும் மனதில் விதைத்தார். பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை அகற்றவும், அதன் அவசியத்தை மாணவர்களிடமும், நாட்டு மக்களிடமும் எடுத்துக் கூறி சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார்.

பிரிட்டிஷ் அரசுக்கு வரி கொடுக்க மறுத்ததால் மெகலின் பெரும் படையுடன் வந்து 1818 டிசம்பர் 18 ல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டார். 

பின் தனது குரு செய்யது அலவியின் மூலம் விடுதலை செய்யப்பட்டார்.

1857 ல் முதல் இந்திய விடுதலை போர் நடந்த போது உமர் காஸி மறைந்தார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் பதிவு செய்யாமல் மறைக்கப் பட்ட பல நூற்றுக்கணக்கான விடுதலை போராளிகளில் வெளியங்கோடு உமர் காஸியும் ஒருவர்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்