ஸகாத்தின் சட்டங்கள்
இஸ்லாத்தின் நான்காவது கடமையான 'ஸகாத்' வறியவர்களும் வாழ வேண்டும் என்பதற்காக வல்ல இறைவனால் வகுக்கப்பட்ட வழமையான பொருளாதாரத் திட்டம் ஆகும். 'ஸகாத்' எனும் அரபிச் சொல்லுக்குத் 'தூய்மை படுத்துதல்' என்று பொருள். செல்வந்தர்கள் சேமிக்கும் நிதியிலிருந்து, இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குகாக வெளளியேற்றப்பட்டாக வேண்டும். இந்த விகிதப்படி செல்வந்தர்கள், ஏழைகளின் உரிமையைத் தம்முடைய உடைமையிலிருந்து வெளியேற்றத் தவறினால் செல்வர்கள் தம்வசம் வைத்திருக்கும் எஞ்சிய 97.5 சதவீதம் நிதியும் தூய்மையை இழந்துவிடுகிறது. இவ்வாறு தூய்மையை இழக்காமல் செல்வந்தர்களின் நிதி முழுவதும் தூய்மையுடன் இருக்க, ஏழைகளுக்கு வழங்கப்படும் இரண்ரை சதவீதம் கட்டாயத் தருமம் துணை செய்வதால் இந்தக் கட்டாயத் தருமத்திற்கு 'ஸகாத்'(தூய்மை படுத்துதல்) என்று வைக்கப்பட்ட பெயர் பொருத்தமாக அமைகிறது.
ஸகாத் கடமையாவதர்க்கான நிபந்தனைகள் :
1.ஸகாத் கொடுக்கும் பொருளின் முழு சொத்துரிமை இருக்க வேண்டும்.
2.அத்தியாவசிய அனைத்து செலவினங்கள் போக மேல் மிச்சமாக இருக்க வேண்டும்.
3.மேல் மிச்சமாக இருப்பது ஷரீஅத் விதித்துள்ள குறிப்பிட்ட அளவை அடைந்திருக்க வேண்டும்.
4.அது ஒரு வருடம் நம்மிடம் இருந்திருக்க வேண்டும்.
5.கடன் இருக்கக் கூடாது.
ஸகாத் கொடுக்கும் பொருள் விருத்தி அடையும் பொருளாக இருக்க வேண்டும்.
ஸகாத்தாய் வழங்கிட தகுதிபெறும் பொருட்கள்
1. தங்கம், வெள்ளி அல்லது இவ்விரண்டின் இடத்தை நிரப்பும் 'கரன்சி' நோட்டு போன்ற நாணயங்கள்.
2. வியாபாரப் பொருட்கள்.
3. தானியங்கள் மற்றும் பழவகைகள்.
4. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்.
2. வியாபாரப் பொருட்கள்.
3. தானியங்கள் மற்றும் பழவகைகள்.
4. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்.
ஷரீஅத் விதிக்கும் (நிஸாப்) குறிப்பிட்ட அளவு:
1.தங்கம்- 85 கிராம் இருந்தால் 2.5% ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.
2.வெள்ளி- 595 கிராம் இருந்தால் 2.5% ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.
3.பணம்-தங்கம் அல்லது வெள்ளியின் அளவை அடைந்தால் 2.5% ஸகாத் கொடுக்க வேண்டும்.
4.விவசாய பொருட்கள், மீன்கள் 653 கிலோ இருந்தால் (தானாக உற்பத்தியானால் 10 சதவிகிதமும் நாம் உற்பத்தி செய்தால் 5 சதவிகிதமும்) ஸகாத் கடமையாகும். வாடகை கட்டிடங்கள், வாகனங்கள்,தொழிற்சாலைகள் பணத்தின் அளவை அடைந்தால்(செலவினம்போக) 2.5% ஸகாத் கடமையாகும்.
ஸக்காத் பெற்றிட தகுதி வாய்ந்தவர்கள்:
1. எவ்வித வருமானமுமில்லாத பரம ஏழைகள் (பக்கீர்)
2. வருமானத்தை விட செலவினங்கள் விஞ்சிய ஏழைகள் (மிஸ்கீன்)
3. ஜக்காத்து நிதியின் வசூலர்களாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள்.
4. புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்.
5. அடிமைகளை விடுதலை செய்தல்
6. கடனில் மூழ்கித் தவிப்பவர்கள்.
7. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர்.
8. வழிப்போக்கர்கள் ஆகிய எட்டு வகையினர்.
2. வருமானத்தை விட செலவினங்கள் விஞ்சிய ஏழைகள் (மிஸ்கீன்)
3. ஜக்காத்து நிதியின் வசூலர்களாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள்.
4. புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்.
5. அடிமைகளை விடுதலை செய்தல்
6. கடனில் மூழ்கித் தவிப்பவர்கள்.
7. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர்.
8. வழிப்போக்கர்கள் ஆகிய எட்டு வகையினர்.
இந்த எட்டுக் கூட்டத்தாரைத் தவிர மற்றவர்களுக்கு கொடுத்தால் ஜக்காத்து செல்லாது.
இதைதான் இறைவன் பின்வருமாறு வலியுறுத்துகிறான்.
"(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், (இஸ்லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பதற்காகவும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிக்போக்கர்களுக்கும் உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்-அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்.)"
அல்குர்ஆன் (9:60)
எனவே ஸகாத் என்னும் கடமையை அல்லாஹ் விதித்த சட்டங்களின் அடிப்படையில் நிறைவேற்றுவோம். இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக