அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

கர்நாடகா : பி.சி சாலையில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அணிவகுப்பு ஒத்திகை


பந்த்வால் (கர்நாடகம்): வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி கர்நாடக மாநிலம் புத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பிரம்மாண்டமான சுதந்திர தின அணிவகுப்பு நடக்க இருக்கின்றது. அதன் ஒத்திகை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுகிழமை பர்லயா பி.சி சாலையில் வைத்து நடைபெற்றது. தனது சொந்த ஊரில் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம் ஷரீ அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி நடத்தித் தந்தார்.

நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது, இந்தியாவிலேயே பாப்புலர் ஃப்ரண்ட் என்ற நமது இயக்கம்தான் சுதந்திர தினத்தை வெகு சிற்ப்பாகவும் அதே சமயம் பிரம்மாண்டமாகவும் நடத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் வாழக்கூடிய குறிப்பாக நசுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்களுக்கு சுதந்திரம், நீதி, பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டு வருகிறது.

இந்திய நாடு வெள்ளையர்களிடமிருந்து 64 ஆண்டுகளுக்கு முன்பாகவே சுதந்திர பெற்ற நிலையிலும், கீழ் ஜாதிமக்களுக்கும், ஏழைகளுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இந்த சுதந்திரம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. எல்லா துறைகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். உயர் ஜாதியினருக்கும், பணக்காரர்களுக்கும் கிடைக்கும் சுதந்திரம் மற்ற மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரியாஸ் கூறும்போது, கர்நாடக அரசாங்கம் தொடர்ந்து சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி மறுத்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து அரசாங்க்கத்தின் அராஜக போக்கை கண்டிப்பதாலும், அவர்கள் செய்யும் ஊழலை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதாலும், குரோத மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது.

இதை போன்ற சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நாட்டின் மூலை முடுக்குகள் அனைத்திலும் இனி வரும் காலங்களில் நடத்துவோம் என்று கூறினார். பாப்புலர் ஃப்ரண்டின் மண்டலச் செயலாளர் ஹனீஃப் அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை காண வந்திருந்தனர்.

மேலும் புகைப்படங்கள்















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்