அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

இந்திய சுதந்திரப் போராட்டமும், முஸ்லிம்களும் - 9

ஆங்கிலேயருக்கு எதிராக 'ஃபத்வா' கொடுத்த

ஷா வலியுல்லாஹ்  குடும்பத்தார் 

ஷா குடும்பத்தாரைப் பற்றி தினமலரில் வந்த படம்
ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி, ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்கினார்.

ஐரோப்பிய ஆட்சியாளர்கள் ஊழல் முறை கேடுகளுடன் இந்த உலகின் பல பகுதிகளையும் அடக்குமுறைக்கு உட்படுத்தினார்கள்.

முழுக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராகவே பொங்கியெழ வேண்டும் என அழைப்பு விடுத்தார் ஷா.

அவர் ஹஜ் புனிதப் பயணத்தின் போது ஆக்கிரமிப்பு சக்திகளை அகற்றி சமத்துவம் சமநீதி கொண்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் விரும்பிய ஆட்சி வீழ்த்தப்பட்ட காட்சிகளையும் அவர் கண்டார்.

1707ல் மாமன்னர் அவ்ரங்கஜேப் காலமானார்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகார ஆட்டத்தைத் துவங்கியது.

1757ல் பிளாசி போர்முனையில் வங்கத்து மாவீரன் சிராஜுத் தவ்லாவை துரோகத்தின் துணை கொண்டு ஆங்கிலேயர் வீழ்த்தினர்.

மனிதநேயத்தை மீட்கவும் அடிமைத் தனத்தை அழிக்கவும் ஷா வலியுல்லாஹ் உறுதி பூண்டார்.

"ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற நூலில், விடுதலை உரிமை, நம் நாட்டு சொத்து மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என ஷா வலியுல்லாஹ் எழுதினார்.

சமூகத்திற்கு உடலாலும் மூளையாலும் உழைப்பவர்கள் யாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்றார்.

விடுதலை உரிமை நம்நாட்டு சொத்துக்களின் மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்றார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.

ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன் னரே காலமாகிவிட்டார்


பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான பத்வாக்கள்: 

1803ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் டெல்லியை கைப்பற்றியது.

கொதித்தெழுந்தார் மார்க்க அறிஞர் ஷா வலியுல்லாஹ்வின் மகன் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி.

ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான ஃபத்வாக்களை பிரயோகித்தார்.

நமது நாடு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் அடிமைத் தனத்தை மீட்க விடுதலைப் போராட்டத்தை துவக்குவது நமது முக்கியக் கடமை என அந்த ஃபத்வா (தண்டனை பேராணை) குறிப்பிடுகிறது.

ஷா வலியுல்லாஹ் மற்றும் ஷா வலியுல்லாஹ் தெஹ்ல்வி ஆகியோர் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்கி சிறப்பு பெற்றவர்கள். இதை பிரிட்டிஷ் தரைப்படை தளபதி தாம்சனே குறிப்பிட்டுள்ளார்.

இவர்களது  வரலாறு பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்