அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

ரமழான் - 9

நோன்பின் சமூகக்கோணம்


அடிப்படையில் தொழுகையைப் போன்று நோன்பும் ஒரு தனிநபர் செயலே! ஆயினும், ஜமாஅத்தோடு கூட்டாக சேர்ந்து தொழுகுங்கள் என்று - ஒரு தனிநபர் செயல், கூட்டமைப்புச் செயலாக ஆக்கபட்டுவிட்டது போல, ஒரு சிறு அற்புத திட்டத்தின் மூலம் நோன்பும் கூட்டமைப்புக்  கடமையாக ஆக்கப்பட்டுவிட்டது. விளைவாக, அதன் பலன்களும, நன்மைகளும் எல்லையிட முடியாத அளவுக்கு பல்கிப் பெருகி விட்டன.
              
என்ன அது? - ஒரு குறிப்பிட்ட மாதத்தில் மட்டும்தான் நோன்பு வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதுதான்! வெறுமனே தனிநபர்களுக்கு பயிற்சி அளிப்பதுதான் சட்டம் இயற்றியவனின் (ஷாரிஹ்) நோக்கமாக இருந்திருக்குமேயானால், ஆண்டின் ஏதேனுமொரு பகுதியில் முப்பது நோன்புகளை வைத்தால் போதும் என்று சொல்லியிருப்பான், அவ்வாறு நோன்பு வைக்கப்பட்டாலும் மேற்கண்ட  எல்லா நன்மைகளும் விளையத்தான் செய்யும்! மனதைக் கட்டுப்படுத்துவது என்ற நோக்கில் அதுதான் சிறந்தது ஆகும்.

கூட்டாக நோன்பு வைப்பதால் கிடைக்கின்ற சில வசதி வாய்ப்புகள் அப்போது கிடைக்காமல் போகும். தான்   வைத்தாக வேண்டிய நோன்புகளை தனித்தனியே நிறைவேற்ற ஒவ்வொருவரும் முயற்சிப்பதால் - தன்னுடைய அதிகாரத்தை மிக அதிக வலிமையோடு பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், இத்தகைய தனித்தனி  முயற்சிகள் ஒரு ஷாலிஹான ஜமாஅத் உருவாவதற்கு துணை  செய்யாது  - என்று நுண்ணறிவாளன் அல்லாஹ் நினைத்தான். ஆகையால், நோன்பை தனிநபர் செயாலாக ஆக்க அவன் விரும்பவில்லை. ஆண்டில் ஒரு மாதத்தை அதற்கென்றே அவன் ஒதுக்கிவிட்டான்.

எல்லா முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து கூட்டாக நோன்பு வைப்பதர்கென்று! இப்பயிற்சியில் உருவாக்கப்படும் தனிநபர்கள் ஒரு ஸாலிஹான ஜமாஅத் உருவாக்கத்தில்  பெரும்பங்கு வகிப்பர்.

இவ்வற்புத திட்டத்தினால் எந்தளவு நோன்பின் ஒழுக்க, ஆன்மீக பயன்பாடுகள் விரிவாயின என்பதை நாம் அறிவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்