அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், ஜூன் 21, 2012

கத்தீல் சித்தீகி கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

கதீல் சித்தீகி 
புதுடெல்லி:குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீல் சித்தீகி கொலைச் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கு பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா-சவூதி புலனாய்வு ஏஜன்சிகள் இணைந்து கைது செய்த ஃபஸீஹ் அஹ்மதின் விவகாரத்தில் நிலவும் மர்மத்தை விலக்க மத்திய அரசு தயாராக வேண்டும் என்றும் செயற்குழு கோரிக்கை விடுத்தது.

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படையால் கைது செய்யப்பட்ட கத்தீல் சித்தீகி தீவிர பாதுகாப்பு மிகுந்த சிறையில் வைத்துக் கொலைச் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தீல் மெளனம் பாலிக்கவேண்டும் என விரும்பிய சிறை-போலீஸ்-புலனாய்வு ஏஜன்சிகளுக்கு தெரியாமல் இந்த கொலை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அரசு இவ்விவகாரத்தில் காட்டும் மெளனத்தை கலைக்கவேண்டும்.

விசாரணை கைதிகளான முஸ்லிம்களை சிறைக்குள் வைத்து கிரிமினல்கள் மூலமாக தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கத்தீலின் உடலை மீண்டும் போஸ்ட் மார்ட்டம் செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவேண்டும்.

நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழுவை சிறைகளில் நிலவும் சூழல்களை குறித்து ஆராய நியமிக்கவேண்டும். தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தி சிறைகளில் அடைக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிச்செய்ய வேண்டும். தீவிரவாத முத்திரைக்குத்தி முஸ்லிம் இளைஞர்களை கொடுமை இழைக்கும் நடவடிக்கையை மத்திய அரசும், போலீஸும் தொடர்கின்றன. ஆனால், வலுவான ஆதாரங்கள் இருந்த போதிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறு விரலை அசைக்கக் கூட அரசு முயலவில்லை.

நீதித்துறை மற்றும் போலீஸின் வகுப்புவாத பாரபட்சம் மற்றும் இரட்டை நிலைக்கு எதிராக வலுவான பிரச்சாரம் நடத்தவும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் அறிக்கை தாக்கல் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்