அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, ஜூன் 30, 2012

மோடி ஊழலற்றவர் என்றால் லோக் ஆயுக்தவை அமைக்க வேண்டும்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் ஊழலற்றவர் என்று காட்ட விரும்பினால், முதலில் லோக் ஆயுக்தவை அமைக்க வழிசெய்ய வேண்டும் என்றார் அண்ணா ஹசாரெ குழுவின் அரவிந்த் கெஜ்ரிவால்.
 
மோடி ஊழல்வாதி என்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "மோடியை நான் ஊழல்வாதி என்று சொல்லவில்லை. அதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், ஊழல்களில் தொடர்புடைய தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவர் பாதுகாக்கிறார். அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு ஆகாமல் பார்த்துக் கொள்கிறார். 

அதற்கு, லோக் ஆயுக்த அமைப்பை அமைக்காமல் இழுத்தடிக்கிறார். கடந்த 9 ஆண்டுகளாக இது குறித்து முறையிட்டும் லோக் ஆயுக்த அமைப்பை அவர் ஏன் அமைக்கவில்லை? ஊழல் இல்லாத மாநிலமாக குஜராத்தை மாற்ற வேண்டும் என்று மோடி விரும்பினால், முதலில் அவர் லோக் ஆயுக்தவை அமைக்க வேண்டும்” என்றார் கேஜ்ரிவால். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்