ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசாங்கம் சச்சார் கமிட்டி அறிக்கையை அடுத்து
முஸ்லிம்களுக்காக தொடங்கப்பட்ட திட்டங்களை மிக மெதுவாக செயல்படுத்துகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் (UPA) தன்னை "சிறுபான்மையினர் நலம் பேணும் அரசு" என்று சொல்லிக்கொள்வதில் ஒருபோதும் சோர்ந்து போனதில்லை. சிறுபான்மையினரிடம் உருவாக்கியுள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் அது தோல்வியை தழுவியுள்ளது. சிறுபான்மையினர் அதிக செறிவுள்ள மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 50 சதவீதத்தை கூட சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் செலவழிக்கவில்லை. சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியை (BSP) சேர்ந்த தாரா சிங் சௌஹான் தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலை குழு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சிறுபான்மையினருக்கான முயற்சிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது வெளியிட்டுள்ளது. இது அந்த சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுக்கு ஏதேனும் அர்த்தமிருக்கிறதா என்ற ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது.
ராஜேந்திர சச்சார் குழு அறிக்கை, முஸ்லிம்கள் சமூக பொருளாதார குறியீடுகள் அடிப்படையில் தலித்துகளை விட மோசமான நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டிய பிறகு, முஸ்லிம்கள் செறிவுள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து அப்பகுதிகளில் பல்துறை அபிவிருத்தித் திட்டங்களை (Multi-sectoral
Development Programme - MsDP) செயல்படுத்த வேண்டும் என்ற யோசனை அரசுக்கு வந்தது. இத்திட்டம் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் முதன்மை திட்டமாக தயாரிக்கப்பட்டது. இந்த அமைச்சகம் சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியின் போது உருவாக்கப்பட்டதாகும். 18.4 சதவீதமுள்ள மொத்த சிறுபான்மையினரில் முஸ்லிம்கள் மட்டுமே 13.4 சதவீதம் உள்ளனர். கிறிஸ்தவர்கள் 2.3 சதவீதமும், சீக்கியர்கள் 1.9 சதவீதமும், புத்தர்கள் 0.8 சதவீதமும், பார்சிகள் 0.007 சதவீதமும் உள்ளனர். எழுத்தறிவு விகிதம், வேலை வாய்ப்பில் பங்கீடு, கான்க்ரீட் வீடுகள், பாதுகாப்பான குடிநீர், மின் இணைப்பு, கழிவறை போன்ற காரணிகள் மூலம் சமூக பொருளாதார நிலை கணக்கிடப்பட்டது. சிறுபான்மையினர் செறிவுள்ள மாவட்டங்களில் உள்ள பிற அடிப்படை வசதிகளையும் குறிப்பெடுக்கப்பட்டது. 20-25 சதவீதம் சிறுபான்மையினர் செறிவுள்ள தொண்ணூறு மாவட்டங்களில் பல்துறை அபிவிருத்தி திட்டம் தொடங்குவதற்காக கண்டறியப்பட்டன.
பல்துறை அபிவிருத்தி திட்டம் 2008-09 நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இம்முயற்சியின் மூலம் ஏதாவது பயன் விளைந்திருக்கிறதா? பயனாளர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? என்பதை கண்டறிய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்திடம் (ICSSR) கேட்டுள்ளது. ICSSR-ன் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. எதுவும் சாதிக்கவில்லை என்று முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கூறுகிறார்கள்.
பல்துறை அபிவிருத்தி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் திட்டங்களை தொடங்குவதற்கான ஒப்புதல் கூட வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை பாராளுமன்ற நிலைக்குழு தெரிவிக்கிறது. சிறுபான்மை செறிவுள்ள 28 மாவட்டங்களில் அரைகுறையாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. செயலாக்குதல் என்பது தொலைதூரக் கனவு என்பது வெளிப்படையாகிறது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்களில் 50 சதவீதத்தை கூட பூர்த்தி செய்யவில்லை.
பல்துறை அபிவிருத்தி திட்டத்தின் படி, இந்திரா அவாஸ் யோஜனா என்ற ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 2,95,162க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கட்டப்பட்டதோ 1,75,008 வீடுகள் மட்டுமே. மீதமுள்ள வீடுகள் கட்டப்படாததற்கு தெளிவான காரணங்கள் எதையும் அமைச்சகம் தெரிவிக்கவில்லை. மேலும், 689 பள்ளிக்கூடங்களும், 2,498 ஆரம்ப சுகாதார நிலையங்களும் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கட்டப்பட்டதோ 334 பள்ளிக்கூடங்களும், 1,623 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே. கட்டுமானப் பணிகளின் போது குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு அடுத்தகட்டப் பணிகள் துவங்கவேண்டியிருப்பதாலும், ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களை இறுதி செய்வதில் ஏற்படும் தாமதத்தாலும் இப்பணியை நிறைவேற்ற முடியவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆய்வுக் குழுவின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அமைச்சகம் மறுத்து வருகிறது. மேலும், திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள கடுமையான தவறுகளையும் பதிவு செய்வதில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வின் போது மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகளை பெருக்குவதிலும், சேவைகளை வழங்குவதிலும் மிகவும் அலட்சியமான போக்கையே காண முடிந்தது. உதாரணத்திற்கு, இத்திட்டத்தின் கீழ் வரும் கல்கத்தாவிலுள்ள ஒரு மருத்துவ மனையில் மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை சிறப்பு மருத்துவர்கள், நரம்பு மூலம் செலுத்தப்படும் வசதிகள், நகரும் படிக்கட்டுகள், அவசர ஊர்தி, மருந்துகள் மற்றும் மற்ற அடிப்படை கருவிகளின் பற்றாக்குறைகளைக் கண்டு திகைத்துப் போயினர்.
இதேபோல், இத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வுகளின் போது எல்லா மட்டத்திலும் மிக மோசமான வசதிப் பற்றாக்குறை நிலவுவது அம்பலமானது. பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாக செலவு செய்யப்படவில்லை என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. MsDPக்காக 2009லிருந்து ரூபாய் 2,359.39 கோடி ஒதுக்கப்பட்டிருந்ததில் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மொத்தமாக செலவழிக்கப்பட்டது ரூபாய் 1,174.93 கோடி மட்டுமே. மாநிலங்களுக்கு நிதி பரிமாற்றம் செய்யப்படுவதில் ஏற்படும் தாமதத்தினால் திட்டங்களை விரைந்து முடிக்க இயலவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆய்வுக்குழு இந்த பதிலால் திருப்தி அடையவில்லை. ஏனென்றால், பேராவலுடன் எதிர் பார்க்கப்படும் இத்திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறதா என்பதை மேற்பார்வையிடுவது அமைச்சகத்தின் தார்மீகக் கடமையாகும். ஜார்கண்ட் மாநிலத்தை தவிர, MsDP செயல்படுத்தப்படும் மற்ற மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படவில்லை. மாநில கண்காணிப்பு குழுக்கள் அந்தந்த மாநிலங்களில் செயல்படுத்தப்படும் MsDP திட்டங்களை கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு குழுவினரின் சந்திப்பு ஒருமுறை கூட நடத்தப்படவில்லை. அப்படியே எப்போதாவது நடத்தப்பட்டிருந்தாலும் முறைப்படி கலந்து கொள்ள வேண்டிய சட்ட மன்ற உறுப்பினர் வருகை தருவது இல்லை.
உண்மையில் முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் உத்வேகமற்ற செயல்பாடுகளை கண்டு முஸ்லிம் சமூக தலைவர்கள் அரசுக்கு முஸ்லிம்களின் தரத்தை உயர்த்துவதில் பொறுப்புணர்வு இல்லையோ என்று வியப்படைகின்றனர். ஹஜ் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக நிறுத்த வேண்டும் என்று மே 9 அன்று உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். இந்த விசயத்தில் உச்ச நீதி மன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகும், அரசு எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முஸ்லிம்களே முன்வந்து மானியத்தை நிறுத்த வலியுறுத்தியும் அரசு கவனத்தில் கொள்ள மறுப்பது ஆச்சரியமளிக்கிறது. ஏனென்றால் ஹஜ்ஜிற்கு மானியம் பெறுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். அரசு புனிதப் பயணிகளிடமிருந்து ரூபாய் 12,000த்தை பெற்றுக் கொண்டு ரூபாய் 28,000த்தை ஏர் இந்தியா விமானத்திற்கு அளிக்கிறது. ஏர் இந்தியா அதற்கான சிறப்பு விமானங்களை இயக்குகிறது. 2011ல் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்காக அரசு மானியமாக ரூபாய் 600லிருந்து 800 கோடி வரை செலவிட்டுள்ளது. பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் இத்தொகையை அரசு முஸ்லிம்களின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறுகின்றனர்.

In 2004, a group of Muslim MPs, led by K. Rehman Khan, Deputy Chairman of the Rajya Sabha, submitted a proposal to the Prime Minister suggesting a mechanism for managing Hajj travel on the lines of the one that exists in Malaysia and Indonesia. Under this system, called Tabung Haji in Malaysia, a fund is created in which every Muslim saves money which he can at a later stage utilise to fund his Hajj pilgrimage. The fund, meanwhile, is used to finance development projects. In a small country like Malaysia, which has one and a half crore Muslims, this fund is worth $10 billion. “The Muslim population in India is 180 million. If the proposed institution targets even 10 per cent of this population, it can reach over 15 million investors, and if the average saving per investor is around Rs.25,000, it can aim to mobilise over Rs.30,000 crore in the course of three to five years. This can change the face of the minority community in India,” Rehman Khan said.
Unfortunately, there has been no response from the government on the proposal. In 2007-08, a committee was constituted under the Cabinet Secretary by the Prime Minister. It submitted its report recently, but nothing from the report has been made public. Fed up with the government's apathy on crucial issues, members of the community have decided to launch a mobilisation drive within the community itself on an all-India basis.
‘Muslim vision' of India In a series of meetings planned over the next few months, prominent Muslim leaders are expected to discuss the “Muslim vision” of India and come up with a plan for the betterment of the community, Rehman Khan said. These leaders include politicians cutting across party lines, parliamentarians, intellectuals and ulemas. A concept paper on “Muslim vision of secular India” has been formulated by Javed Jamil, executive chairman of the International Centre for Applied Islamics, in association with Rehman Khan and Sirajuddin Qureshi, president, Indian Islamic Cultural Centre.
The objective is to make the community itself a major stakeholder in its development and motivate members to take their future into their own hands, for which the government will play the role of a facilitator. The approach paper of this plan, which has been widely circulated and discussed within the community, is likely to be finalised into a concrete plan of action soon.
(மேலே காணும் கட்டுரையில் பிரதிபலிப்பது கட்டுரையாளரின் கருத்துக்கள். இது PFI-ன் கருத்து அல்ல)
நன்றி: ப்ரண்ட்லைன் ஜூன் 16-29
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக