புதுடெல்லி:சிறுபான்மை உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆந்திரபிரதேச மாநில
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்க
நிர்பந்திக்காத மத்திய அரசின் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் கவுரவ்
பானர்ஜியின் நிலைப்பாடு புரியாத புதிராக உள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் குற்றம்
சாட்டியுள்ளார்.
முன்னரே நிச்சயித்தபடி சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள்
மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் மேலும் தெரிவித்தது:
ஐ.ஐ.டியில் சேர்க்கைப் பெற்ற முஸ்லிம் மாணவர்களும், அவர்களது
பெற்றோர்களும் சிறுபான்மை உள் ஒதுக்கீட்டின் மூலம் தங்களது கனவு நினைவாகப்
போகிறது என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருந்தனர். ஆனால்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்திய நாடகம் மூலம் அவர்களை 27 சதவீத
பொது பிரிவு எனும் குளத்தில் குதிக்கவைத்து ஏக்கமடைய வைத்துவிட்டது.
நீதிமன்றத்தில் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரலிடம், “Are you sure to not
press the stay? Why are you changing your stand suddenly? (நீங்கள்
இடைக்கால தடைவிதிக்க வற்புறுத்தவில்லை என்பது உறுதிதானா? ஏன்
உங்களை நிலைப்பாட்டை திடீரென மாற்றினீர்கள்?) என நீதிபதி மூன்று தடவை
கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல், ‘தயவு
செய்து உரிய உத்தரவை பிறப்பியுங்கள்’ என தெரிவித்தார்.
ஐ.ஐ.டி கவுன்சிலிங்கின் கடைசி தினமான ஜூன் 15-ஆம் தேதிக்கு முன்பு தடை
உத்தரவை பெறுவதற்காகவும், இந்த கல்வியாண்டே உள் ஒதுக்கீட்டை உறுதிச்
செய்வதற்கும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.
ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தடை உத்தரவு
தேவையில்லையென்றால் ஏன் உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும்?அற்பமான அரசியல்
ஆதாயங்களுக்கான பிரச்சார ஆயுதம் என்பதை தவிர இவ்விவகாரத்தில் அரசுக்கு
ஆத்மார்த்த ரீதியான எண்ணம் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக