இ.எம்.அப்துர் ரஹ்மான், தேசிய தலைவர், PFI |
புதுடெல்லி:சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு
கூட்டணியின் பொறுப்பற்ற அணுகுமுறைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் இடஒதுக்கீடு தொடர்பாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்திலும்,
தற்பொழுது உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசின் சந்தேகத்திற்கிடமான
நடவடிக்கைகள் இதனை நிரூபிப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் ஏமாற்று வித்தைக்
குறித்து தமது தீவிரமான கவலையை வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது: ‘ஆந்திர
மாநில உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க
உச்சநீதிமன்றம் மறுத்தது ஐ.மு அரசின் பாசாங்கு தனத்தை
வெளிக்கொணர்ந்துள்ளது.
ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை
பாதுகாக்கும் எவ்வித தீவிர நடவடிக்கையையும் ஐ.மு அரசு ஒருபோதும்
மேற்கொள்ளவில்லை. அதேப் போக்கையே உச்சநீதிமன்றத்திலும் பின்பற்றியுள்ளது.
ஒ.பி.சி இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு வழங்கிய உள் ஒதுக்கீட்டை
பாதுகாக்க தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்பதை உச்சநீதிமன்றம்
சுட்டிக்காட்டியுள்ளது.
இது தெளிவாக ஐ.மு அரசின் பொறுப்புணர்வில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும்.
இவ்விவகாரத்தில் கடந்த 3 மாதங்களாக ஐ.மு அரசு எவ்வித ஆதரவு ஆவணங்களையும்
சேகரிக்க தீவிரமாக முயற்சி மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் உ.பி தேர்தலில்
முஸ்லிம்களின் வாக்குகளை கவரவே ஐ.மு அரசு சிறுபான்மையினருக்கு உள்
ஒதுக்கீட்டை அறிவித்தது என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
முதலில் ஐ.மு அரசு மிஸ்ரா கமிஷனின் பெயரால் ஒட்டுமொத்த முஸ்லிம்
சமூகத்தின் சமூக-பொருளாதார ரீதியான பின்தங்கிய நிலையைப் பற்றி கவலைக்
கொள்ளாமல் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு
என அறிவித்தது. மறுபுறமோ, மிஸ்ரா கமிஷனின் அறிக்கையில், 8.4 சதவீதம்
சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் 6 சதவீதத்தை
முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கவேண்டும் என்ற பரிந்துரைச் செய்ததை
புறக்கணித்தது.
மிஸ்ரா கமிஷனின் அறிக்கைப்படி மத்திய அரசு இடஒதுக்கீட்டு உத்தரவை
பிறப்பித்திருக்குமானால், உச்சநீதிமன்றம் எழுப்பிய குறிப்பிட்ட அறிக்கை
குறித்த கேள்வி எழுந்திருக்காது.
ஒருபுறம் தீவிரவாதத்திற்கு எதிரான போரின் பெயரால் முஸ்லிம்களை
குறிவைக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு அரசு மறுபுறம் இடஒதுக்கீட்டின்
பெயரால் போலியான வாக்குறுதிகளை அளித்து முஸ்லிம்களை சமாதானப்படுத்த
முயற்சிக்கிறது.
முஸ்லிம்கள் ஒரு செயலற்ற, சிந்திக்க தெரியாத சமுதாயம் அல்ல என்பதை ஐ.மு
அரசு புரிந்துகொள்ள வேண்டும். உ.பி தேர்தலில் முஸ்லிம்கள் அளித்த பதில்
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கண்களை திறக்க வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் ஐ.மு அரசு முஸ்லிம்களின் பிரச்சனைகளில் பிற்போக்குத்
தனமான அணுகுமுறையை கடைப்பிடித்தால் இறுதியில் முஸ்லிம்கள் காங்கிரஸை
புறக்கணித்துவிட்டு மாற்றுக் கட்சிகளை தேடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்
என்று இ.எம்.அப்துற்றஹ்மான் எச்சரிக்கை விடுத்தார். இது வகுப்புவாத பாசிச
சக்திகளுக்கு கூட உதவும் வகையில் அமைந்து காங்கிரஸ் கட்சியை அதிகாரத்தில்
இருந்து தூக்கி எறிய வழிவகுக்கும் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக