எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முர்ஸி, இன்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி சார்பில் போட்டியிட்ட முர்ஸி, 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில்
உயர்நீதிமன்றத்தில் 18 நீதிபதிகள் முன்பாக முர்ஸி புதிய ஜனாதிபதியாக இன்று
பதவியேற்றுக் கொள்வார் என நீதிமன்ற துணைத்தலைவர் மஹர் சமி
தெரிவித்துள்ளார்.
பொதுவாக
நாடாளுமன்றத்தில் தான் புதிய ஜனாதிபதி பதவி ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால்
நாடாளுமன்றத்தை உச்ச நீதிமன்றம் கலைத்து விட்டதால், புதிய ஜனாதிபதி
நீதிமன்றத்தில் பதவி ஏற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என கோரி வருகின்றனர்.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என கோரி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக