அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், ஜனவரி 19, 2012

குன்டனாமோ சிறை மூடல் குறித்த எதிர்பார்ப்பு 10 ஆண்டுகளாய் தொடர்கிறது

குன்டனாமோ சிறை
கியூபாவிலுள்ள குன்டனாமோ விரிகுடா கடற்படை தளத்தில்  அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட குன்டனாமோ விரிகுடா தடுப்பு முகாமில் சட்டத்திற்கு புறம்பான சிறையும், விசாரணை வசதியும் உள்ளது.


ஆப்கானிஸ்தான் போர்க்கைதிகளையும், பிறகு ஈராக் போர்க்கைதிகளையும் சிறை வைப்பதற்காக புஷ் நிர்வாகத்தினால் ஜனவரி 11, 2002 இல் இந்த முகாம் நிறுவப்பட்டது. 

சிறைப்பகுதி மூன்று முகாம்களைக் கொண்டுள்ளது.  அவைகள் டெல்டா முகாம், உடும்பு முகாம், எக்ஸ்ரே முகாம் ஆகியவையாகும். அதில் எக்ஸ்ரே  முகாம் மட்டும் மூடப்பட்டுள்ளது.


ஒரு கைதி அழைத்துச் செல்லப்படும் காட்சி

குன்டனாமோ, G-விரிகுடா, கிட்மோ, ராணுவ சுருக்கப் பெயரில் GTMO ஆகிய பெயர்களால் குன்டனாமோ விரிகுடா கடற்படை தளம் அழைக்கப்பட்டு வந்தது.

ஜெனிவா உடன்படிக்கை வலியுறுத்தும் எவ்விதமான சலுகைகளும் குன்டனாமோ சிறைக்கைதிகளுக்கு அளிக்க முடியாது என்று புஷ் நிர்வாகம் அறிவித்த பிறகு, ஹம்டன் V.ரம்ஸ்பெல்ட் விவகாரத்தில் ஜூன் 2006 இல் உச்ச நீதி மன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. ஜெனிவா உடன்படிக்கையின் பொதுவான விதிமுறைகள் பிரிவு 3 இல் கூறப்பட்டுள்ள குறைந்த பட்ச பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

அதைதொடர்ந்து, ஜூலை 7, 2006-இல் பாதுகாப்பு அமைச்சகம் ஓர் உள் அறிக்கையை வெளியிட்டது. அதில் எதிர்வரும் காலங்களில் குன்டனாமோ சிறை வாசிகளுக்கு பொதுவான விதிமுறைகள் பிரிவு 3 இல் கூறப்பட்டுள்ள குறைந்த பட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 22, 2009 இல் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை, ஜனாதிபதி ஒபாமா குன்டனாமோ ராணுவ கமிசன் விசாரணையை 120 நாட்களுக்கு ஒத்திவைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் என்று தெரிவித்தது. மேலும், குன்டனாமோ முகாம் சிறைகள் ஒரு வருடத்திற்குள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஒபாமா ஜனவரி 7, 2011 இல் 2011 பாதுகாப்பு சட்ட மசோதாவில் கையெழுத்திட்டார். அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படி குன்டனாமோ சிறைக்கைதிகள் வேறு முக்கிய நிலப்பகுதிகளுக்கோ, அந்நிய தேசத்திற்கோ பரிமாற்றம் செய்யப்படுவது தடை செய்யப்பட்டது. இதனால் சட்ட விரோத சிறை வைப்பு முகாமின் மூடல் முறைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதன், ஜனவரி 18, 2012

முஸ்லிம்களின் மின்னஞ்சல்களில் ஊடுருவலை நிறுத்தவும்: கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை

கோழிக்கோடு: முஸ்லிம்களில் பொது மற்றும் பத்திரிக்கையாளர்களின் மின்னஞ்சல்களில் கேரள காவல் துறை ஊடுருவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில பொது செயலாளர் பி அப்துல் ஹமீது வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம்களில் முஸ்லிம் லீக் தலைவர்களின் மின்னஞ்சல்களும் காவல் துறையால் ஊடுருவப்பட்டிருப்பது, காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரின் கவனத்துக்கு வராமலோ, தெரியாமலோ நடந்திருக்க வாய்ப்பில்லை. காவல் துறையின் கண்காணிப்பு பட்டியலில் உங்களின் பெயர் எவ்வாறு இடம் பெற்றது என்று லீக் தலைவர்களை கேட்டுக் கொண்டார்.

காவல் துறையில் முஸ்லிம் விரோத போக்குள்ள அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக பாப்புலர் பிரண்ட் குற்றம் சாட்டி வந்தது. மின்னஞ்சல் ஊடுருவல் நாங்கள் கூறிவரும் புகாரை சரி என உறுதிப்படுத்துகிறது. இது போன்ற நச்சு எண்ணம் கொண்ட அதிகாரிகளால் தான் "லவ் ஜிஹாத்" என்ற விசமக் கருத்துகள் கேரளாவில் உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த மின்னஞ்சல் ஊடுருவல் என்றால் இதில் எப்படி முஸ்லிம்கள் மட்டும் உட்படுத்தப்படுவார்கள்? என்று கேரளா முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அப்துல் ஹமீது அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மாத்யமம் மலையாள வார இதழ் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து செய்தி வெளியிட்ட பிறகு தான் இப்பிரட்சினை விசுவரூபமெடுத்துள்ளது. பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இதனை கடுமையாக எதித்து வருவதால், முதல்வர் உம்மன் சாண்டி இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். முஸ்லிம் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச் சொற்களை ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் மற்றும் பிற மின்னஞ்சல் சேவை நிறுவனங்களிடமிருந்தும் பெற்று ஊடுருவியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

வெள்ளி, ஜனவரி 13, 2012

82-வது வார்டு SDPI மாமன்ற உறுப்பினர் முஹம்மது சலீம் அவர்களின் மக்கள் நலப் பணிகள்

82-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முஹம்மது சலீம் அவர்களின் முயற்சியால் கடந்த 40 ஆண்டுகாலமாக சாலை வசதியின்றி அவதிப்பட்டு வந்த மூன்று தெருக்களுக்கு சிமெண்ட் கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை கோட்டை மேடு வின்சென்ட் சாலை மாலை முரசு அலுவலகத்திற்கு அருகிலுள்ள 3 சந்துகளுக்கு  சிமெண்ட் கான்க்ரீட் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.  

பணிகளைப் பார்வையிடும் மாமன்ற உறுப்பினர் முஹம்மது சலீம்
பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர்களிடமும், சட்ட மன்ற உறுப்பினர்களிடமும் தொடர்ந்து முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ஆனால் தற்போது 82-வது வார்டு மாமன்ற உறுப்பினராகியிருக்கும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியைச் சேர்ந்த முஹம்மது சலீம் பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறார். பல தசாப்தங்களாக முறையிட்டும் நடக்காத பணிகள் தற்போது நடைபெறுவதை கண்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

திங்கள், டிசம்பர் 26, 2011

இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு

கடந்த டிசம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் கூடியது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்க துணை தலைவர் மு.முஹம்மது இஸ்மாயில், பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது, செயலாளர் மு. முஹம்மது ஷேக் அன்சாரி மற்றும் ஆரிஃப் ஃபைசல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
‌1. கடந்த நவம்பர் 26, 27ல் டெல்லியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு தேசிய அளவில் குறிப்பாக வட இந்தியாவில் சிறுபான்மை மக்களிடையே பெருமளவில் சமூக நீதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதுள்ளது இம்மாநாட்டில் பல மாநிலங்களிலிருந்து பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு மாநாடு வெற்றியடையச் செய்துள்ளார்கள். இம்மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்தினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.

2. முல்லை பெரியார் அணை விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை உடனே நடை முறைப்படுத்திட வழிவகை செய்ய வேண்டும். மேலும் அமைதிப்பூங்காவான தமிழகத்தில் இப்பிரச்சனையினால் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணித்து அமைதியை நிலை பெறச் செய்ய மாநில அரசு தேவையான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

‌3. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தாமதித்து கொண்டிருப்பதை மாநில செயற்குழு கண்டிக்கிறது. மாநிலத்திலும் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு 3.5% சதவீதத்திலிருந்து 5% சதவீதமாக உயர்ந்த பரிசீலனை செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே மத்தியில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு மற்றும் மாநிலத்தில்5% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை, கோவை மற்றும் மதுரையில் வருகின்ற ஏப்ரல் 22, 2012 அன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

4. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அணுமின் நிலையங்களின் ஆபத்துகளை கருத்தில் கொண்டும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு மத்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

‌ஏ.காலிது முஹம்மது
(மாநில பொதுச்செயலாளர்)

வியாழன், நவம்பர் 10, 2011

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சமூக நீதி மாநாடு - கலந்தாய்வு கூட்டம்

கோவை,  
வருகிற நவம்பர் 26, 27 இல் டெல்லியில் வைத்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சார்பாக சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளது  அதனை முன்னிட்டு  கோவை மாவட்டத்தில் மாநாட்டை அறிமுக படுத்தும்முகமாகவும் பெரும்திரளான மக்களை அழைத்து செல்வதற்கான கலந்தாய்வு கூட்டம் கோவை மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சார்பாக அதன் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது
  
இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார் இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் மாநில தலைவர் ஜனாப் இஸ்மாயில் சாஹிப் பேசுகையில் நம்மை சுற்றி நடக்கும் அநீதிகளை ஓழித்து  சமூக நீதியினை நிலை நாட்ட பாடுபட வேண்டியது அனைத்து குடி மக்களின் கடமையாகும் எனவேதான் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற முழக்கத்தோடு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா "சமூக நீதி மாநாடு " ஒன்றை வருகிற நவம்பர் 26,27 இல் நமது நாட்டின் தலை நகர் புது  டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் வைத்து நடத்த இருக்கின்றது 

சமூக நீதியின் செய்தியை மக்களுக்கு கொண்டு செல்வது இந்த மாநாட்டின் நோக்கமாகும் சமூக நீதியினை மீட்டுஎடுப்பதற்கான போராட்ட களத்தில் நமது பங்களிப்பை நாம் செலுத்த  வேண்டிய காலம் வந்துள்ளது நீதிமிக்க தேசத்தை அமைப்பதற்கான முயற்சியில் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் உடன் கைகோர்க்குமாறு அனைத்து தரப்பு மக்களையும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அன்புடன் அழைக்கிறது மேலும் இக்கூடத்தில் மாவட்ட செயலாளர் முஸ்தபா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இயக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தேடுதல்