அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, மார்ச் 09, 2012

சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் வாழ்த்துக்கள்!

K.M.சரீப் அவர்கள் PFI பொதுச் செயலாளர் (கோப்புப் படம்)
புதுடெல்லி: நடந்து முடிந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2007 ஆம் பகுஜன் சமாஜ் கட்சியிடம் ஆட்சியை இழந்த சமாஜ்வாதி கட்சி தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு மீண்டும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜாதியின் பெயரைக்கொண்டும், அவர்களது வாக்குகளைக்கொண்டும் ஜெயித்துவிடலாம் என்ற மாயாவதியின் கனவு தகர்க்கப்பட்டு ஜாதியையெல்லாம் புறம் தள்ளிவிட்டு மக்கள் நடுநிலையாக இருந்து வாக்களித்துள்ளார்கள்.

சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணம் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் அது திரட்டியதால் தான் என அரசியல் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். உத்திரபிரதேசத்தின் முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் ஒரு கட்சி ஆட்சியமைக்க முடியாது என்ற வலுவான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆட்சியை இழந்த மாயாவதி கூறும்போது "முஸ்லிம்களின் வாக்குகளே சமாஜ்வாதி கட்ச்யினருக்கு வெற்றியை கொடுத்துள்ளது" எனக்கூறினார்.

உத்திரபிரதேச முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளின் சக்திகளை சரியாக புரிந்து கொண்டனர். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்குவோம் என்ற காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். இதுநாள் வரை காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டே வருகிறது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத்தீரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இதனாலேயே காங்கிரஸை முஸ்லிம்கள் புறக்கணித்துவிட்டனர்.

முஸ்லிம்களின் ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சி இதனை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். சமாஜ்வாதிகட்சி எதிர்கொள்ளவிருக்கும் முதல் சோதனை தன்னுடைய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமளிப்பதில் இருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதாக வாக்களித்திருக்கின்றனர். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கும் அவர்களுடைய வறுமையை போக்கும்விதத்தில் இராஜேந்திர சச்சார் கமிஷன் பரிந்துரை செய்ததின் படி இடஒதுக்கீட்டினை அதிகப்படுத்தி தரவேண்டும். உத்திரபிரதேச முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மற்றொரு முக்கிய கோரிக்கை என்னவெனில் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதுதான்.

எனவே தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றி மாநிலத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்வதோடு தேர்தலின் வெற்றிக்காக பணியாற்றிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களுக்கும் அதன் தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது என்று K.M.சரீப் அவர்கள் (பொதுச் செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழன், மார்ச் 08, 2012

அவதூறு பிரசாரத்தை கண்டிக்கும் ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள்

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக மீடியாவின் ஒரு பகுதியினர் செய்து வரும் அவதூறுப் பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வலதுசாரி மதவாத இயக்கங்கள் வேண்டுமென்றே திட்டமிட்ட சதிச் செயல்களின் மூலம் பரப்பி வரும் விஷக் கருத்துக்கள் என்று தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பயோனியர் என்கின்ற ஆங்கில தினசரிதான் இந்தப் போலிப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது. டில்லி சாணக்கியபுரியில் நடந்த குண்டுவெடிப்பில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி காயமடைந்தார்.

இந்த குண்டுவெடிப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் பங்களிப்பு இருக்கின்றதா என விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், சமீபத்தில் கேரளாவில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுக்குழுவில்  இந்திய இஸ்ரேலிய உறவை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் இதன் பின்னனி எனவும் எழுதியது பயோனியர்.

பயோனியர் சங்கப்பரிவாரத்தின் அறிவிக்கப்படாத‌ பத்திரிக்கை என்பதை அனைவரும் அறிவர். பின்னர் அதே கதை சில சிறிய மாற்றங்களுடன் நியு சன்டே எக்ஸ்பிரஸ், டைனி ஜாக்ரன், நவ் பாரத் டைம்ஸ், இன்கிலாப், டெக்கான் கிரோனிக்கல் மற்றும் சி.என்.என், ஐபிஎன் ஆகிய மீடியாக்களில் வெளிவந்ததன் மூலம் யாரோ சிலர் டெல்லியில் இருந்து பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக வேலை செய்து கொண்டும் அப்பாவி வாசகர்கள் பாப்புலர் ஃப்ரண்டை சந்தேக கண் கொண்டு பார்க்கவும் சதி செய்து வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் மேலும் தெரிவிக்கையில் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை சக்திப்படுத்தும் பாதையில் வேண்டுமென்றே திட்டமிட்டு தடைகற்களை ஏற்படுத்தி வருவதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது என்றார்.

உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி நாடகவும், பல நாடுகளுக்கு எதிராக சூழ்ச்சி மற்றும் குழப்பம் செய்து வரும் நாடான இஸ்ரேலுடன் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் உறவினை பல அமைப்புகள் கண்டித்துள்ளன. அதே போன்று இஸ்ரேலின் ஏஜெண்டுகள்  பல நாடுகளில் மதவாத பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம்  மூன்று இஸ்ரேலிய பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இது போன்ற போலியான பிரச்சாரங்களில் பொதுமக்கள் அச்சமடையவும் , உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவும் வாய்புள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இஸ்ரேலிய ஏஜென்டுகள் மீடியாவினரைக்கூட காசு கொடுத்து வாங்கும் திறன் படைத்தவர்கள். அதன் ஒரு பகுதியாகக்கூட இந்த பிரச்சாரங்கள் இருக்கலாம் என தெரிவித்தார் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான். அதே போன்று அவதூறுப் பிரச்சாரங்களைக் கண்டு மக்கள் ஏமாந்து விட வேண்டாம் எனவும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்த்யா இது விஷயத்தில் தலையிட்டு சட்டப்படி ஜனநாயக ரீதியில் போராடி வரும் இயக்கங்களுக்கு எதிராக இது போன்ற போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இந்த அவதூறுப் பிரச்சாரம் தொடர்பாக தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர்களான செய்யது சஹாபுதீன் (முன்னால் எம்.பி), தொல் திருமாவளவன் எம்.பி, தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, டாக்டர். ஜஃபருல் இஸ்லாம் கான், பிரசிடென்ட், ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ்-யே-முஷாவரத், டாக்டர் ஜான் த்யாள், உறுப்பினர் நேஷன் இன்டெக்ரேஷன் கவுன்சில், அப்துல் காலிக், பொதுச்செயலாளர் (லோக் ஜன சக்தி), பேராசிரியர் மார்க்ஸ், தலைவர் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ் நாடு), வழக்கறிஞர் பவானி ப. மோகன் மற்றும் பல சமூக, மனித உரிமை ஆர்வலர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்டு வரும் சமூக இயக்கங்களுக்கு எதிராக மீடியாக்கள் பரப்பி வரும் இது போன்ற போலி பிரச்சாரத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

புதன், மார்ச் 07, 2012

UP தேர்தலில் வென்ற முஸ்லிம் MLA-க்களின் பட்டியல்

உ.பி.யின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஓரளவு வாய்ப்புகளை வழங்கியிருந்தன.அதில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் 2012 தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், சமாஜ்வாடி கட்சி 225 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது எதிர்பாராத வெற்றியாகும்.

முலாயமின் கட்சி வெற்றிக்கு முஸ்லிம்கள் பெரும் உழைப்பை செலுத்தியுள்ளனர். முலாயம் இவ்வெற்றிக்கு முஸ்லிம்கள் - யாதவர்கள் என்ற இரு சமூகத்தையும் பயன்படுத்தினார். ஆனால் அது மட்டுமே முழு வெற்றிக்கும் காரணமல்ல. மாயாவதியின் ஆட்சியில் உயர் சாதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் தங்களிடம் வேலை செய்யும் தலித்துகளுக்கு பெரும் தொகையை ஊதியமாக வழங்க வேண்டியிருந்தது. மேலும் வருமான வரியும், மின் கட்டணமும் பெருமளவில் செலுத்த வேண்டியிருந்தது. அது அவர்களைப் பொறுத்தவரை மிகுந்த சிரமத்தை தந்தது.

இதன் மூலம் மாயாவதியின் சமூக தொழில்நுட்ப சூத்திரம் தோல்வியை சந்தித்தது. முலாயமின் முஸ்லிம்-யாதவர் துருப்பு சீட்டு வெற்றிபெற்றது.

புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் Dr. அயூப் அவர்களால் துவங்கப்பட்ட சமாதான கட்சி (PEACE PARTY) யின் வெற்றியும் ஒரு நல்ல செய்தியாகும். கலீதாபாத் தொகுதியில் மிக எளிதாக வென்ற அவரின் வெற்றியையும் சேர்த்து அக்கட்சி 6 இடங்களில் வென்றுள்ளது. 80 களில் Dr. பரீதி அவர்களின் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி சில இடங்களில் வென்றது. அதன் பிறகு தற்பொழுது தான் சமாதானக் கட்சி உருவெடுத்துள்ளது.

பல்வேறு கட்சிகள் வழங்கிய சீட்டுகளில் வென்ற முஸ்லிம்களின் பட்டியல் இதோ: 
1-பாடோஹி, ஜகித் பெக் SP
2-முஹம்மடபாத்,  சிப்கத்துல்லாஹ் அன்சாரி, சுயேச்சை
3-சஹூரபாத், செய்யிதா ஷதாப் பாதிமா, SP
4-ஜான்பூர்,  நதீம் ஜாவேத், காங்கிரஸ்
5-சிகண்டர்பூர்,  ஜியாவுதீன் ரிஜ்வி   SP
6-மாஉ,  முக்தார் அன்சாரி, சுயேச்சை
7-டிடர்கஞ்,  அதில் ஷேக், SP
8-நிசாமாபாத், அலம்படி,  SP
9-முபாரக்பூர்,  ஷாஹ் ஆலம்,  BSP
10-கோபல்பூர்,  வசீம் அஹ்மத்,  SP
11-ராம்பூர் கர்க்கன, Choudhari Fasiha Bashir, SP
12-பதர்தேவா, சாகிர் அலி, SP
13-கலீதாபாத், Dr. முஹம்மது அயுப், Peace party
14-டுமரியகஞ், கமல் யூசுப் மாலிக், Peace party
15-உற்றால,  ஆரிப் அன்வர் ஹஷ்மி,  SP
16-டுல்சிபூர், அப்துல் மஷ்ஹூத் கான், SP
17-ஷ்ராவாஸ்தி, முஹம்மது ரம்ஜான், SP
18-பஹ்ரைச், Dr. வாகர் அஹ்மத் ஷாஹ், SP
19-தண்ட, அஜிமுல் ஹக் பஹ்ல்வான், SP
20-குர்சி, பரீத் மக்பூஜ் கித்வாய், SP
21-தென் அலகாபாத், ஹாஜி பர்வேஸ் அகமது, SP
22-ஹுல்புர், சயீத்  அஹமத், SP
23-பபாமு. அன்சார் அகமது, SP
24-செயில், ஆஷிப் முகமது ஜாப்ரி, பகுஜன் சமாஜ் கட்சி
25-ஹுசைன்கஞ், முகமது ஆசிப், பகுஜன் சமாஜ் கட்சி
26-பதேபூர், சையத் காசிம் ஹசன், SP
27-சிசமு, ஹாஜி இர்ஃபான் சொலான்கி, SP
28-போஜ்புரி, ஜமாலுதீன் சித்திக், எஸ்.பி.
29-Isauli, அப்ரார் அகமது, SP
30-திலோய், முகமது. முஸ்லீம் காங்கிரஸ்
31 லக்னோ மேற்கு, முகமது ரஹ்மான், SP
32-பங்கர்மு, பட்லு கான், SP
33-ஷஹபாத், பாபு கான், SP
34-லஹர்பூர், ஜாஸ்மிர் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி
35-பிலிபிட், ரியாஜ் அகமது, SP
36-போஜிபுற, Shazil இஸ்லாமியம், indep
37-மீர்கஞ், சுல்தான் பேய், பகுஜன் சமாஜ் கட்சி
38-பஹேரி, அதாஉர்ரஹ்மான் , SP
39-படாவுன், அபிட் ரஸா கான், SP
40-பில்சி, முசர்ராத் அலி கலைஞர் ரோய் பிட்டன், பகுஜன் சமாஜ் கட்சி
41-படியலி, நஜீவா ஜீனத் கான், SP
42-அலிகார், ஜாபர் ஆலம், SP
43-கோயில், சமீர் உள்லாஹ் கான், SP
44-புலண்ட்ஷஹ்ர், முகமது அலீம் கான், பகுஜன் சமாஜ் கட்சி
45-முரட்நகர், வஹாப், பகுஜன் சமாஜ் கட்சி
46-லோனி, ஜாகீர் அலி, பி
47-சிவல்க்ஹஸ், குலாம் முகம்மது, SP
48-ஹசன்பூர், கமல் அக்தர், SP
49-அம்ரோஹா, மெஹபூப் அலி, SP
50-ணைகவான் சதாத், அஷ்பாக் அலி கான், SP
51-ராம்பூர், அசம் கான், SP
52-சம்ராஉஅ, அலி யூசுப் அலி, BSP
53-சம்பல், இக்பால் மெஹ்மூத், SP
54-பிளறி, முஹம்மத் இர்பான், SP
55-குண்டர்கி, முஹம்மத் ரிழ்வான், SP
56-மொரடபாத் நகர், முஹம்மத் யூசுப் அன்சாரி, SP
57-மொரடபாத் ரூரல், Shameemul Haq, SP
58-காந்த், அனீசுர் ரெஹ்மான், Peace party
59-சந்திபூர், இக்பால், BSP
60-பர்ஹபூர், முஹம்மத் காஜி, BSP
61-நஜிபபாத், தஸ்லீம், BSP
62-மீரபூர், ஜமில் அஹ்மத் கஸ்மி, BSP
63-சர்தவால், நூர் சலீம் ரண, BSP
64-புதான, நவஜிஷ் ஆலம் கான், SP

செவ்வாய், மார்ச் 06, 2012

பீமாபள்ளி துப்பாக்கிசூடு: புலனாய்வை திசை திருப்பும் முயற்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் எச்சரிக்கை

பீமாப்பள்ளி துப்பாக்கி சூடு நீதி கோரி பேரணி
திருவனந்தபுரம்: பீமாப்பள்ளி துப்பாக்கிசூடு விசாரணை அறிக்கையை மூடி மறைக்க முயற்சி செய்தால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது. வழக்கின் விசாரணையை திசை திருப்பும் முயற்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் அனுமதிக்காது என்று அதன் மாநில பொதுச் செயலாளர் P.அப்துல் ஹமீது அவர்கள் கூறியுள்ளார். 

பீமாபள்ளியில் நடந்த ஒரு சிறு பிரச்சினையை பயன்படுத்தி காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 6 அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தது. விசாரணை அறிக்கையை சட்ட சபையின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திருவனந்தபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடு செய்திருந்த பேரணியை துவங்கி வைத்துப் பேசும்போது இவ்வாறு கூறினார். 

ஒன்றரை மாதத்திற்கு முன்பே நீதி விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட்ட பிறகும் அரசு எவ்விதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. தொடர் நடவடிக்கையை முடக்கும் முயற்சியாக அரசு நீதி விசாரணை அறிக்கையை சபையில் விவாதிக்க தயக்கம் காட்டி வருகிறது. பீமாப்பள்ளி துப்பாக்கி சூடு சம்பவம் காவல்துறையின் மிகப் பெரிய சதியின் ஒரு பகுதி தான் என்று அப்துல் ஹமீது அவர்கள் சுட்டிக்காட்டினார். அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் பின்பற்றவில்லை. அன்றைய மாவட்ட ஆட்சியரும், துணை ஆட்சியரும் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு அனுமதி எதையும் கொடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சலீம் கரமண, செயலாளர் சரபுதீன் மௌலவி, சமூக ஆர்வலர் விழிஞ்சம் இசாக், SDPI மாவட்ட துணை தலைவர் நிஜாம் மணக்காடு, NCHRO தலைவர் அப்துஸ்ஸலாம் மாஸ்டர், A இப்ராகிம் குட்டி, NWF மாவட்ட தலைவர் நசீமா ஷம்நாடு, கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சஜாத் ஆகியோரும் பேரணி துவங்கும் முன்பு பேசினர்.

திங்கள், மார்ச் 05, 2012

சமூக மேம்பாட்டுதுறை - பிப்ரவரி மாத ரிப்போர்ட்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூகத்தை மேம்படுத்தும் பணியில் தனது செயல்பாட்டை தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அதற்கான அறிக்கையை சமுதாய மக்கள் மன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்ற மாதம் முதல் ஒவ்வொரு மாதத்திற்கான ரிப்போர்டை நமது தளத்தில் பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற செயல்பாடுகள், பணிகள் மற்றும் உதவிகள் பற்றிய ஓர் பார்வை!

சென்னையில் சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஏழை பெண்ணிற்கு திருமண உதவி அளிக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர் சுலைமான்

கன்னியாகுமரி:

குளச்சல் ஜமாத்திற்கு உட்பட்ட அப்துர் ரஹ்மானின் மகன்  அல்-அமீனுடைய படிப்பு செலவிற்காக கல்வி உதவித்தொகையாக ரூபாய் 5000/-  வழங்கப்பட்டது.

திங்கள் சந்தை:

ஜைனபா என்பவரின் மகன் அபூதாஹிருடைய மருத்துவ செலவிற்காக ரூபாய் 4500/- வழங்கப்பட்டது.

மாதவலாயம்:

டயாலிசிஸ் செய்வதற்காக ரூபாய் 3500/-ம் மாதவ்லாயத்தில் மருத்துவ முகாமிற்காக ரூபாய் 10662/- மற்றும் திட்டுவிலளையில் ரூபாய் 1000/-மும் வழங்கப்பட்டது. மேலும் நாகர்கோவில் சூரங்குடியில் ஒரு மாணவனின் படிப்பிற்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 5000/- மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 1500/-ம் வழங்கப்பட்டது. மேலும் 5 யூனிட் அளவிற்கு இரத்ததானம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு  ரூபாய் 3000/- மற்றும் ரூபாய் 1500/- மதிப்பில் சேலைகளும் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

கல்வி உதவியாக ரூபாய் 500/-ம் விபத்து மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 46,000/- வழங்கப்பட்டது.

திருப்பூர்:

கல்வி உதவித்தொகையாக ரூபாய் 2000/-மும் பொருள் உதவியாக ரூபாய் 350/-ற்கும் வழங்கப்பட்டது. மேலும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து பயன் பெற்றனர்.

கோவை வடக்கு:

மேட்டுப்பாளையம் குன்னூரிலும், ஊட்டியிலும் இரத்த வகை கண்டறியும் முகாம்கள் நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். சுமார் 17000/- அளவில் இதற்காக செலவு செய்யப்பட்டது. மேலும் இலவச தையல் பயிற்சி பள்ளியில் கடந்த மாதம் மட்டும் 23 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

சென்னை:

கல்வி மற்றும் கம்ப்யூட்டர் படிப்பிற்காக ரூபாய் 10500/-ம் 6 முதியவர்களுக்கு ரூபாய் 650/- வீதமும், சிறு நீரகம் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு ரூபாய் 8000/-மும், திருமண உதவித்தொகையாக 12500/-ம் வழங்கப்பட்டது. மேலும் 13 யூனிட் அளவிற்கு இரத்த தானம் செய்யப்பட்டது. விதவை பெண் ஒருவருக்கு மாதா மாதம் ரூபாய் 500/-வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தேனி:

கடையநல்லூரைச் சேர்ந்த ஒருவர் கம்பம் வந்த பிறகு இறந்துவிட்டார். அவரது ஜனாசாவை அவரின் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கு ஏற்பாடு செய்ததுடன் குடும்ப செலவிற்காக ரூபாய் 24,500 கொடுக்கப்பட்டது. அதே போன்று நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக கர்பப்பை நோய் ஆலோசனை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 77 பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் மருத்துவ உதவியாக ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

தேடுதல்