பீமாப்பள்ளி துப்பாக்கி சூடு நீதி கோரி பேரணி |
திருவனந்தபுரம்: பீமாப்பள்ளி துப்பாக்கிசூடு விசாரணை அறிக்கையை மூடி மறைக்க முயற்சி செய்தால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது. வழக்கின் விசாரணையை திசை திருப்பும் முயற்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் அனுமதிக்காது என்று அதன் மாநில பொதுச் செயலாளர் P.அப்துல் ஹமீது அவர்கள் கூறியுள்ளார்.
பீமாபள்ளியில் நடந்த ஒரு சிறு பிரச்சினையை பயன்படுத்தி காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 6 அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தது. விசாரணை அறிக்கையை சட்ட சபையின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திருவனந்தபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடு செய்திருந்த பேரணியை துவங்கி வைத்துப் பேசும்போது இவ்வாறு கூறினார்.
ஒன்றரை மாதத்திற்கு முன்பே நீதி விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட்ட பிறகும் அரசு எவ்விதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. தொடர் நடவடிக்கையை முடக்கும் முயற்சியாக அரசு நீதி விசாரணை அறிக்கையை சபையில் விவாதிக்க தயக்கம் காட்டி வருகிறது. பீமாப்பள்ளி துப்பாக்கி சூடு சம்பவம் காவல்துறையின் மிகப் பெரிய சதியின் ஒரு பகுதி தான் என்று அப்துல் ஹமீது அவர்கள் சுட்டிக்காட்டினார். அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் பின்பற்றவில்லை. அன்றைய மாவட்ட ஆட்சியரும், துணை ஆட்சியரும் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு அனுமதி எதையும் கொடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சலீம் கரமண, செயலாளர் சரபுதீன் மௌலவி, சமூக ஆர்வலர் விழிஞ்சம் இசாக், SDPI மாவட்ட துணை தலைவர் நிஜாம் மணக்காடு, NCHRO தலைவர் அப்துஸ்ஸலாம் மாஸ்டர், A இப்ராகிம் குட்டி, NWF மாவட்ட தலைவர் நசீமா ஷம்நாடு, கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சஜாத் ஆகியோரும் பேரணி துவங்கும் முன்பு பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக