புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைப் பற்றி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய்யான செய்தியை வெளியிட்ட தி நியு சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு அவர்களுக்கு பதில் கடிதத்தையும் அனுப்பியுள்ளது பாப்புலர் ஃபரண்ட்.
டெல்லியில் வெளிவரும் பத்திரிக்கையான தி நியு சண்டே எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 26 ஞாயிற்று கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் அப்பத்திரிக்கைக்கு பதில் கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகள் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய அவதூறு பிரச்சாரத்தை பரப்பி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
தி நியு சண்டே எக்ஸ்பிரஸில் வெளியான செய்தி முழுக்க முழுக்க கற்பனை செய்யப்பட்டதும் ஜோடிக்கப்பட்டதுமேயாகும். இஸ்ரேலுடனான உறவை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இதற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம் எடுத்துள்ளது எனவும் இதனால் காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளை நோட்டமிட்டு வருவதாக கூறியுள்ளது அப்பத்திரிக்கை.
இஸ்ரேலுடனான உறவை கண்டித்து தீர்மானம் எடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இன்னும் எத்தனையோ மதச்சார்பற்ற அமைப்புகளும், முஸ்லிம் அமைப்புகளும் இத்தகைய உறவை வன்மையாக கண்டித்திருக்கிறது. ஜியோனிச காரர்களின் ஊடுறுவதால்தான் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக மேலும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக