மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் வாழும் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் உழல்வதாக டாடா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸின்(டிஸ்ஸ்-TISS) ஆய்வு கூறுகிறது.
மலேகானின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளோ ஆரோக்கிய பாதுகாப்பு வசதிகளோ கிடைப்பதில்லை என்று 221 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கூறுகிறது.
மஹராஷ்ட்ரா மாநிலத்தில் சிறுபான்மை கமிஷனுக்காக 2010-ஆம் ஆண்டு துவங்கிய ஆய்வின் அறிக்கையை இவ்வருட துவக்கத்தில் கமிஷனுக்கு டிஸ்ஸ் சமர்ப்பித்தது. இங்குள்ள முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முற்றிலும் பிரதிநிதித்துவம் இல்லை என்று ஆய்வு கூறுகிறது.
2006 மற்றும் 2008 ஆம் ஆண்டில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் மிகவும் பாதிக்கப்பட்ட மலேகான் மக்களின் சமூக, பொருளாதார, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய டிஸ்ஸின் அசோசியேட் ப்ரொஃபஸர் அப்துல் ஸபானின் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. மொத்த மரண சதவீதத்தில் 45 சதவீதமும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் என்றும், அவர்கள் வறுமையின் காரணமாக மரணிப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துக்குறைவினால் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மலேகானில் அதிகமாகும்.
மலேகானில் பெரும்பாலான இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக பொருளாதார நிலையை ஆய்வுச்செய்த சச்சார் கமிஷனின் அறிக்கை வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்து மலேகான் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது.
நன்றி: ஆசிய நண்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக