அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், மார்ச் 12, 2012

2014ல் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவது கடினம் : ஆர்.எஸ்.எஸ் !

RSS பயங்கரவாதிகள்
புது டெல்லி : காங்கிரஸ் கட்சியை பீடித்துள்ள நோயை போன்று பி.ஜே.பியிலும் தொண்டர்களை விட பெரும் எண்ணிக்கையில் தலைவர்கள் இருப்பதால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவது கடினம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
தன்னுடைய கட்சி வெளியீடான ஆர்கனைஸர் மற்றும் பஞ்ஜன்யா இதழ்களின் தலையங்கத்தில் உத்தரபிரதேசத்தில் வலுவான கட்டமைப்பும் தொண்டர்களையும் கொண்டிருந்தும் ஏன் வாக்காளர்கள் பி.ஜே.பியை தேர்வு செய்யவில்லை என்பதை குறித்து பி.ஜே.பி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பி.ஜே.பிக்கு பணியாற்றும் தொண்டர்களை விட அதிகமாக தலைவர்களை வைத்திருப்பது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பி.ஜே.பி வெறும் 47 இடங்களை மட்டும் பெற்று பரிதாபகரமாக தோற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஆசியாநண்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்