அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், மார்ச் 27, 2012

ஏமாற்றம் தரும் தமிழக பட்ஜெட் – SDPI

சென்னை:தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2012-13 நிதியாண்டு பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது என்று SDPI தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் எந்த உருப்படியான திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மின்வெட்டின் காரணமாக இருளில் மூழ்கி இருக்கும் தமிழகத்தில் அதனை உடனடியாக சரி செய்வதற்கான தீர்வுகள் பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை.
குண்டு மின்சார பல்புகளை ஒழிக்கும் திட்டத்தையோ அல்லது மின்சார விரயத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்தையோ அறிவித்திருந்தால் கூடுதல் மின்சாரம் சேமிக்கப்பட்டிருக்கும்.
அந்நிய நாட்டு நிறுவனங்களின் முதலீட்டிற்கு 20,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நலிந்து போயிருக்கும் உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க உருப்படியான திட்டம் இல்லை.
பட்ஜெட் குறித்து முதல்வர் ஏற்கனவே அறிவித்துவிட்டதால், பட்ஜெட்டின் அறிவிப்புகள் தற்போது முக்கியத்துவம் பெறவில்லை.
ஏற்கனவே பல்வேறு வகையான உயர்வும், சொத்து மதிப்பு உயர்த்தப்படுவதும் பொது மக்களைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதுபோல் அரசு நிர்வாகத்தில் நிலவும் சீர்கேடுகள், அரசுத் துறையில் புரையோடிப்போய் கிடக்கும் லஞ்ச லாவண்யங்களை ஒழிப்பது குறித்து எந்த திட்டமும் இல்லாதது ஏமாற்றத்திற்குரியது.
முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான எந்த உருப்படியான திட்டங்களும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள அரசு, நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு சொத்துக்களை மீட்க திட்டமிடாதது வருந்தத்தக்கது.
முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின்படி முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி அறிவிப்புகள் இல்லாதது முஸ்லிம்களை ஏமாற்றும் வகையில் உள்ளது.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில்துறையினர், முஸ்லிம்கள் என பொது மக்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது.
இருப்பினும் பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள், கோதுமை மற்றும் ஓட்ஸ் ஆகிய உணவுப் பொருட்களுக்கு வரி நீக்கம் ஆகியவை வரவேற்கத்தக்கது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது தீர்மானம் : ஐ.நாவில் தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்கா

ஜெனிவா : பாலஸ்தீன் பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் குடியேற்றங்கள் பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை கண்காணிக்க சர்வதேச விசாரனை நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானம் அமெரிக்காவை தவிர அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டு ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்தில் ஏற்கனவே இஸ்ரேலால் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் பலஸ்தீனர்கள் வாழும் எல்லை பகுதியிலும் இஸ்ரேல் குடியேற்ற திட்டங்களை மேற்கொள்வதாகவும் பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுவதாகவும் புகார்கள் எழுந்தன.


இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் பாகிஸ்தான் தாக்கல் செய்தது. இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, க்யூபா, வெனிசுலா, நார்வே, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 36 நாடுகள் ஆதரித்து வாக்களிக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்கா மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது.

இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 10 நாடுகள் இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இத்தகைய பதற்றத்தை அதிகரிக்கும் தீர்மானங்களை நிராகரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா சபையில் எத்துணையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அமெரிக்காவின் ஆதரவால் அவை பயனில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஆசியா நண்பன்

திங்கள், மார்ச் 26, 2012

வறுமையில் உழலும் மலேகான்!

மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் வாழும் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் உழல்வதாக டாடா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸின்(டிஸ்ஸ்-TISS) ஆய்வு கூறுகிறது.
மலேகானின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளோ ஆரோக்கிய பாதுகாப்பு வசதிகளோ கிடைப்பதில்லை என்று 221 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கூறுகிறது.
மஹராஷ்ட்ரா மாநிலத்தில் சிறுபான்மை கமிஷனுக்காக 2010-ஆம் ஆண்டு துவங்கிய ஆய்வின் அறிக்கையை இவ்வருட துவக்கத்தில் கமிஷனுக்கு டிஸ்ஸ் சமர்ப்பித்தது. இங்குள்ள முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முற்றிலும் பிரதிநிதித்துவம் இல்லை என்று ஆய்வு கூறுகிறது.
2006 மற்றும் 2008 ஆம் ஆண்டில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் மிகவும் பாதிக்கப்பட்ட மலேகான் மக்களின் சமூக, பொருளாதார, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய டிஸ்ஸின் அசோசியேட் ப்ரொஃபஸர் அப்துல் ஸபானின் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. மொத்த மரண சதவீதத்தில் 45 சதவீதமும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் என்றும், அவர்கள் வறுமையின் காரணமாக மரணிப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துக்குறைவினால் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மலேகானில் அதிகமாகும்.
மலேகானில் பெரும்பாலான இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக பொருளாதார நிலையை ஆய்வுச்செய்த சச்சார் கமிஷனின் அறிக்கை வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்து மலேகான் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது.
நன்றி: ஆசிய நண்பன்

வக்ப் வாரியத் தலைவரை உடனடியாக நியமனம் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயற்குழுவில் தீர்மானம்

கூடங்குளம் அணுஉலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்யவும், திட்டக் கமிசனின் வறுமைக் கோட்டு வரையறையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் செயற்குழுவில் தீர்மானங்கள் 
 
வக்ப் வாரியத் தலைவரை உடனடியாக நியமனம் செய்யவும், கூடங்குளம் அணுஉலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்யவும், திட்டக் கமிசனின் வறுமைக் கோட்டு வரையறையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 21,22.03.2012 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது, துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் பொருளாளர் கே. எஸ்.எம். இப்ராஹிம் என்ற அஸ்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள்பலரும்கலந்துகொண்டனர்.

செயற்குழுவில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. புதிய அரசு பொறுப்பேற்று பல மாதங்களாகியும் வக்ஃபு வாரியத் தலைவர் இன்னும் நியமனம் செய்யப்பட வில்லை. இது வக்ஃப் வாரியம் மீதும் அதன் சொத்துக்கள் மீதும் அரசு கவனம் செலுத்த விரும்பவில்லை என்பதுடன் முஸ்லிம்கள் விவகாரத்தில் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவது போன்று தோற் றமளிக்கின்றது.
அது மட்டுமல்லாமல் வக்ஃப் சொத்துக்கள் அரசியல்வாதிகளால் குறிப்பாக ஆளும் கட்சியினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதும் அதனை ஆளும் அரசு கண்டும் காணாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கும் இச்செயற்குழு இது தொடர்பாக உள்துறைச் செயலர்,சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துஉரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென முறையிடவும் தீர்மானித்துள்ளது.

2. கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடி வரும் மக்களின் உணர்வுகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளநியாயமான சந்தேகங்களை புறந்தள்ளி விட்டு அணுஉலை செயல்பட தமிழக அμசு அனுமதித்துள்ளதை வன்மையாக கண்டிக்ககின்றது இச்செயற்குழு.
மேலும், கூடங்குளம் பகுதி மக்கள் காவல்துறையினரின் குவிப்பினால் அடக்கு முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு அவர்களின் தினசரி வாழ்க்கை பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.
அரசு இது விஷயத்தில் கூடங்குளம் மக்களின் ஜனநாயகரீதியிலான போராட்டத்திற்கு மதிப்பளித்து அங்கு நிலைமைகள் சீரடைய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூடங்குளம் அணுஉலை தொடர்பான அரசின் முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.

3. இந்திய நகரங்களில் வாழும் ஒருவர் ஒரு நாளைக்கு ரூபாய் 29ம் கிராமத்தில் வாழக்கூடிய ஒருவர் ரூபாய் 22ம் சம்பாதிக்கின்றார் எனில் அவர் அனைத்து வசதிகளையும் ஒருங்கே அமையப் பெற்றவர் என்றும் அதற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் தான் ஏழைகள் என்றும் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது மத்திய அμசின் திட்டக் கமிஷன்.
இன்று பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு பலரின் தினசரி வாழ்வையே கேள்விக்குரியதாக ஆக்கி வரும் இவ்வேளையில் நீங்கள் ஹோட்டலில் ஒரு தோசை சாப்பிட்டாலே பணக்காரர்கள் பட்டியலில் வந்து விடுவீர்கள் எனும் கேலிக் கூத்தான அறிக்கையை வெளியிட்டு இந்திய மக்களின் மேல் மேலும்ஒரு இடியை இறக்கி உள்ளது மத்திய அரசின் திட்டக்கமிஷன்.
திட்டக்கமிஷனின் இந்த அறிவிப்பை வன்மையாக கண்டிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் திட்டக் கமிஷனின் இந்தஅறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமெனவும் நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒத்துவராத இது போன்ற முடிவுகளை வெளியிடுவதில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது

யூத பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்

புதுடெல்லி: யூத பயங்கரவாத சக்திகள் நமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டு அமைதியை சீர்குழைத்து வரவதோடு நாட்டில் பல தீவிரவாத தாக்குதல்களுக்கும் காரணமாய் விளங்கிவருகிறது. யூத பயங்கரவாதத்தை எதிர்த்து நாடு முழுவதும் வீரியத்துடன் பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் தீர்மானித்துள்ளது.

தேசிய தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அளவில் நடைபெறவிருக்கும் இப்பிரச்சாரத்தின் அங்கமாக மத்திய அரசு இஸ்ரேலுடனான தனது உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பாராளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்த இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத நாடாக திகழ்ந்து வரும் இஸ்ரேல் ரவுடி நாடாக திகழ்ந்து வரும் அமெரிக்காவுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியா போன்று இறையாண்மையுடன் செயல்பட்டுவரும் நாடுகளை ஈரான், ஃபலஸ்தீன் போன்ற நாடுகளை எதிர்ப்பதற்காக நிர்பந்தித்து வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திற்கும், தீவிரவாத எதிர்ப்பு போராட்டத்திற்கும் இஸ்ரேலின் ஏஜென்ஸியை நாடி இருப்பது வியக்கத்தக்கதாக இருக்கிறது. காரணம் உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக செயல்படுவதே இஸ்ரேல்தான். இஸ்ரேலுடனான உறவை இந்தியா அதிகப்படுத்தினால் அதனை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு பயங்கரவாத செயல்களில் இந்துத்துவா சக்திகள் மேலும் வீரியத்துடன் செயலாற்றும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இஸ்ரேலால் பாதிக்கப்பட்ட ஃபலஸ்தீன மக்களுக்காக கண்ணீர் சிந்திவிட்டு மறுகணமே இஸ்ரேலுடனான உறவை ஏற்படுத்துவது நமது தேசத்தின் மரபுகளுக்கு எதிரான ஒன்று என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபனிந்து ஃபலஸ்தீனத்திற்கு எதிராகவும், ஈரானிற்கு எதிராகவும் செயல்பட்டுவிடக்கூடாது என வலியுறுத்துகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் அனைவரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் பள்ளி செல்வோம் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். பள்ளிக்குழந்தைகளுக்கான உபகரண பொருட்கள் மொத்தம் 1 லட்சம் குழந்தைகளுக்கு  இவ்வருடம் வட இந்திய மாநிலங்களில் விநியோகிக்கப்படும். இந்த பிரச்சாரத்தின் போது கல்வி விழிப்புணர்வு, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்றவையும் மேற்கொள்ளப்படும்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டம் நிறைவேற்றிய மற்றொரு தீர்மானமாவது, தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் தொடங்குவது பற்றி தனது கருத்தினை வெளியிட்டுள்ளது. தீவிரவாதம் என்பது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலும், ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் தெரிவித்தது போன்று இது கூட்டணைப்பிற்கு எதிரானதாக அமைந்துவிடும். எனவே மத்திய அரசு தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் தொடங்குவது தொடர்பான தன்னுடைய தீர்மானத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. தேர்தல் நேரங்களில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தேர்தல்களில் தங்களுடைய வாக்குகளை செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களை வாசித்தார். துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, உறுப்பினர்கள் மெளலானா உஸ்மான் பேக், பேராசிரியர் கோயா, யா முஹைதீன், வழக்கறிஞர் கே.பி. ஷரீஃப், ஹாமித் முஹம்மது, ஓ.எம்.ஏ. ஸலாம், முஹம்மது ரோஷன் மற்றும் மாநில தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தேடுதல்