கர்நாடக மாநிலத்தில் "பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா"வின்
நிகழ்ச்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்திய போலீசுக்கு எதிராக தொடரப்பட்ட
வழக்கில், நீதிமன்றம் ரூ 50,000அபராதம் விதித்ததாக கர்நாடக மாநில தலைவர்
"இல்யாஸ் தும்பே" தெரிவித்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில், நேற்றுமுன்தினம் மைசூரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவ்வியக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீப்,
ஆர்.எஸ்.எஸ். போன்ற ஹிந்துத்துவ சக்திகள், நாட்டில் மத துவேஷங்களை பரப்பி, கலவரங்களை நிகழ்த்தி முஸ்லிம்களை கருவறுக்க நினைக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் சதி திட்டங்களை நாட்டிலுள்ள பெரும்பான்மையான ஹிந்து சமூக மக்கள் ஏற்கவில்லை,என்றார்.
பிரபல கன்னட பத்திரிக்கையான "ஆந்தோலன்" ஆசிரியர் ராஜசேகர கோட்டி, பேசுகையில்:
அரசியல் சாசன சட்டங்களை நிலை நிறுத்த வேண்டுமானால், அது குறித்த முழுமையான தெளிவுகளை முஸ்லிம் சமூகம் புரிந்துக்கொள்ள வேண்டும், அதற்க்கு கல்வியின் தேட்டம் அவசியம்,என்றார்.
டாக்டர் துவாரகா நாத், பேராசிரியர் பகவான், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்.மகேஷ் ஆகியோர் பேசுகையில்,
முஸ்லிம் சமூகம் எப்போதும் நடவடிக்கைகளை தொடங்குவதில்லை.
தாக்கப்படும்போது தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் சமூகமாகவே செயல்பட்டு வந்துள்ளது.
அநீதிகளுக்கெதிரான "பாப்புலர் ஃப்ரண்டின் தற்போதைய முயற்சிகள் கண்டிப்பாக பத்தாண்டுகளில் பலன் தரும்" என்றனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநிலத்தலைவர் "இல்யாஸ் தும்பே" பேசுகையில்:
பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும், மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர், 45 நாட்களுக்கு முன்பே முறையான அனுமதி கோரப்பட்டு நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு, காவல்துறை ஏற்படுத்திய தடைகள் சொல்லி மாளாது என்றார்.
இதற்கு முன்பு இதே நகரத்தின் "ஃபவுன்டைன் சர்க்கிள்" பகுதியில், பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்திய காவல்துறையின் செயல்களை எதிர்த்து, நீதிமன்றத்தில் நாம் தொடுத்த வழக்கில், 50,000ரூபாய் "அபராதம்" விதிக்கப்பட்டும், போலீஸ் திருந்தவில்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக