எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் தலைவர் இ. அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனின் விடுதலைக்கு போராடும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதி அகமது ஜாபரி உள்ளிட்ட 7 பாலஸ்தீனியர்களும் மற்றும் 2 குழந்தைகளும் பலியாகியுள்ளனர். மேலும் பல பாலஸ்தீனியர்களும், சிறு குழந்தைகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இந்த பயங்கரவாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அடிப்படை மனிதாபிமானக் கொள்கைகளை மீறி இஸ்ரேல் இந்த பயங்கரவாத தாக்குதலை பாலஸ்தீன் மீது தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் மௌனம் காப்பது மிகவும் வருந்தத்தக்கது.

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களை மட்டுமல்லாது அப்பாவி பாலஸ்தீன மக்களையும், குழந்தைகளையும் குறி வைத்தே இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளது. காசா பகுதியில் அத்துமீறி இஸ்ரேல் தொடர்ந்து தரைவழித் தாக்குதலை நடத்தி பாலஸ்தீன மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது.
பாலஸ்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு எதிர்காலத்தில் பெரும் மோதல்களுக்கு வழிவகுக்கும். சர்வதேச சட்டங்களையும், மனித நேய நெறிமுறைகளையும் மீறி இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
இந்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கக்கூடிய இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். பாலஸ்தீன மக்களை தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் போராட வேண்டும்.
பயங்கரவாத செயல்களை பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்தால், மிகவும் மோசமான விளைவுகளை இது சர்வேதேச அளவில் ஏற்ப்படுத்தும் என நான் எச்சரிக்கிறேன்.
ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத செயல்களை கண்டிக்க வேண்டும். இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக