அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

முல்லா தாதுல்லா இறந்தது உண்மை: தலிபான் ஒப்புதல்

அமெரிக்கா நடத்திய உளவு விமானத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் மூத்த தளபதி முல்லா தாதுல்லாவும், 20 போராளிகளும் உயிரிழந்ததை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

 பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானிலும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா உளவு விமானங்கள் கடந்த 18-ம் தேதியில் இருந்து தொடர்ந்து குண்டுவீசித் தாக்கின.

அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஷ்யா

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலொன்று அமெரிக்க கடற்பரப்புக்குள் நுழைந்து உளவுபார்த்துச் சென்ற சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறித்த கப்பலானது அமெரிக்காவின் அனைத்து கண்காணிப்புகளையும் மீறி தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

பாபா ராம்தேவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கூறும் பாபா ராம்தேவ், தன்னை விளம்பரப்படுத்தி பிரபலமாக்க பல்வேறு போராட்ட நாடகங்களை நடத்தி வருகிறார்.

ரூ.60லட்சம் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக  பாபா ராம்தேவுக்கு அமலாக்க பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்க வலியுறுத்தி போராட்டாம் நடத்தி வரும்  பாபா ராம்தேவ் அறக்கட்டளை நடத்தி வருகிறார். வெளி நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அவருக்கு இந்துத்துவாவின் ஆதரவு உள்ளது.

அமெரிக்கப் படைகளின் அளவுக்கு அதிகமான அதிர்ச்சி மரணங்கள்

ஆப்கானிஸ்தான் போர்க்களம் சென்ற அமெரிக்கப்படைகள் சந்தித்த மரணங்கள் தொடர்பாக வெளியாகியிருக்கும் கணிப்புக்கள் இன்றைய ஐரோப்பாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதுவரை ஆப்கானில் இறந்த அமெரிக்கப்படைகளின் தொகை 2000 என்று அறிவித்துள்ளது.

பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தின் உடலை தோண்டியெடுத்து பரிசோதிக்க முடிவு

பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் பொலோனியம் என்ற விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து சுவிஸ் நாட்டு ஆய்வகம் பரிசோதனை செய்ய உள்ளது.

பாலஸ்தீன விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தேடுதல்