வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்
என்று கூறும் பாபா ராம்தேவ், தன்னை விளம்பரப்படுத்தி பிரபலமாக்க பல்வேறு போராட்ட நாடகங்களை நடத்தி வருகிறார்.
ரூ.60லட்சம் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக பாபா
ராம்தேவுக்கு அமலாக்க பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கறுப்பு பணத்தை
ஒழிக்க வலியுறுத்தி போராட்டாம் நடத்தி வரும் பாபா ராம்தேவ்
அறக்கட்டளை நடத்தி வருகிறார். வெளி நாட்டில் இந்தியர்கள் பதுக்கி
வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும்
அவருக்கு இந்துத்துவாவின் ஆதரவு உள்ளது. மேலும் மத்திய அரசின் கவனம் இவர் நடத்தி
வரும் அறக்கட்டளைகள் பக்கம் திரும்பியது. பாபா ராம்தேவ் உதவியாளர்
பாலகிருஷ்ணா, போலி பாஸ்போர்ட் வழக்கில் கடந்த ஆண்டு சிறையில்
அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில் அமலாக்கபிரிவு பாலகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாக அவர் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கபிரிவு நேற்று முன்தினம் பாபா
ராம்தேவுக்கும் 2 நோட்டீசுகளை அனுப்பி வைத்துள்ளது. பாபா ராம்தேவ் நடத்தி
வரும் திவ்ய யோகா மந்திர் டிரஸ்ட், பதஞ்சலி யோகா பீத் டிரஸ்ட் ஆகிய
அறக்கட்டளைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.60 லட்சம் வந்தது தொடர்பாக
விளக்கம் கேட்டு இந்த நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன. கணக்கில் வராத சட்ட
விரோதமாக பெறப்பட்ட பணம் இது என்று அமலாக்கப்பிரிவு குற்றம்
சாட்டியுள்ளது.
அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் ராம்தேவ், பாலகிருஷ்ணா
மற்றும்அறக்கட்டளைகளின் இயக்குனர்கள் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது. பாபாராவ் பெயரில் நேரடியாக நோட்டீஸ் அனுப்பப்படுவது
இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அறக்கட்டளை மற்றும்
அதன் நிர்வாகிகள் பெயரில் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வந்தது.
இதுகுறித்து இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான அமலாக்கப்பிரிவு துணை
இயக்குனர் ராஜேஷ்வர் சிங்கிடம் கேட்டபோது, இந்த விஷயம் விசாரணையில்
இருப்பதால் வேறு எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக