நமது தேசம் 65வது சுதந்திர தின கொண்டாட்டத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் கோவை மாவட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நமது முன்னோர்கள் ஜாதி, மத பேதமின்றி ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரத்தம் சிந்தி போராடியதன் வெற்றிக்கனி தான் நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கும் சுதந்திரக் காற்று.
இப்படிப்பட்ட சுதந்திர தின விழாவை கௌரவிக்கும் விதமாகவும், சுதந்திர போராட்டத்தின் தியாக நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக் குலுங்கச் செய்யும் விதமாகவும், சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின அணிவகுப்பை பல மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது. 2008ம் ஆண்டு மதுரையிலும், 2009ம் ஆண்டு கும்பகோணத்திலும், 2010ம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலும் இந்த நிகழ்ச்சியை நாம் சிறப்பாக நடத்தியுள்ளோம். 2011ல் நாம் நெல்லையில் நடத்த இருந்த சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் கடைசி நேரத்தில் அனுமதியை மறுத்து தனது சிறுபான்மையினர் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் தமிழகத்தில் மதுரை, நாகப்பட்டினம், இளையான்குடி ஆகிய இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நாம் நடத்த முடிவு செய்து ஒரு மாதத்திற்கு முன்பே (அதாவது 6.7.2012 அன்றே) மனு செய்திருந்தோம்.
சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான இந்தியக் குடிமகனின் உரிமைக்கு மீண்டும் ஒரு முறை அரசு அனுமதி மறுத்துள்ளது துரதிஷ்டவசமானது. வழக்கம் போல் தமிழக காவல் துறையினர் இம்முறையும் கற்பனை மற்றும் யூகங்களை காரணங்களாகக் கூறி முஸ்லிம்களின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளனர். ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய சுதந்திர தினத்தில் மிகப்பெரும் ஜனநாயக உரிமைப் படுகொலையை அரசு மற்றும் தமிழக காவல் துறையினர் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக