தீவிரவாதிகள் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானி |
ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற நரோடா பாடியா
வழக்கில், 32 பேர் குற்றவாளிகளாக அறிவித்து ஆமதாபாத் சிறப்பு கோர்ட்
தீர்ப்பளித்துள்ளது.
95 அப்பாவி முஸ்லிம்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், பா.ஜ. முன்னாள் அமைச்சர் மாயா
கோட்னானி மற்றும் பஜ்ரங் தள் கட்சி முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி
உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களில், பஜ்ரங் தள் தலைவர்
பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என்றும், 29 பேரை
இவ்வழக்கிலிருந்து விடுவித்து ஆமதாபாத் சிறப்பு விசாரணை கோர்ட்
உத்தரவிட்டுள்ளது.
குஜராத் கலவரத்தின் போது இடம்பெற்ற நரோதா - பாடியா கலவரத்துடன் தொடர்புடையதாக இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2002 குஜராத் கலவரத்தின் போது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னர் பிப்ரவரி 28ம் தேதி, விஷ்வ ஹிந்து பரிஷித்தினால் பந்த் ஒன்றுக்கு அழைப்புக்கு விடப்பட்டது. இந்த பந்தின் போது நரோடா - பட்டியா பிரதேசத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டத்தில் 90 பேர் கொல்லப்பட்டதுடன், 33 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவத்தில், 62 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு 2009 ஆகஸ்ட் மாதம் முதல் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. சுமார் 327 க்கு மேற்பட்ட சாட்சிகள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே சந்தேக நபர்கள் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதுடன் இதில் குற்றவாளிகளாக 32 பேர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். நரேந்திர மோடியின் 2009ம் ஆண்டு ஆட்சியின் போது பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி துறை அமைச்சராக இருந்த மாயா கொட்நானி என்பவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். கலவரம் நடைபெற்ற போது இவர் எம்.எல்.ஏவாக இருந்தார். தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு முஸ்லீம்கள் தான் காரணம் என புகார் கூறப்பட்ட நிலையில் குஜராத்தின் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் மூன்று நாட்கள் பெரும்வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று தான் நரோடா - பாடியா படுகொலை சம்பவம் ஆகும். தற்போது குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளவர்களுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக