அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

புனே குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாதிகள்

புனே: புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்தும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
 
புனேயில் அடுத்தடுத்து 4 இடங்களில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்திருந்தனர். புனே குண்டுவெடிப்பு பற்றி கருத்து தெரிவித்த மத்திய அரசு, தீவிரவாத செயல் இல்லை என்று நேற்று கூறியிருந்தது.
 
இந்நிலையில் இன்று குண்டுவெடித்த இடங்களை நேரில் பார்வையிட்ட ஆர்.ஆர்.பாட்டில், பயங்கரவாதிகளின் சதியா என்பது குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் இந்துத்துவா பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமா? என்று கேட்டதற்கு எல்லாவகையான கோணங்களிலும் இருந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.
 
தயானந்த பாட்டீல் யார்?
இதனிடையே குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது காயமடைந்தவர்களில் ஒருவரான தயானந்த பாட்டீல் என்பவர் புனே அருகில் உள்ள உருளிகஞ்சன் கிராமத்தைச் சேர்ந்தவர். குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடங்களில் ஒன்றான பல்கான்தார்வா திரையரங்கு முன்பா அன்னா ஹசாரே குழுவினர் அண்மையில் போராட்டம் நடத்திய போது அப்பகுதியில் அவர் நடமாடியதாக கூறப்படுகிறது. நேற்று அப்பகுதிக்கு சென்ற தயானந்த பாட்டீல் அங்கு தமது கைப்பையை இறக்கி வைத்து விட்டு சென்ற பிறகே குண்டுவெடித்தது என்று கூறப்படுகிறது. இந்த தயானந்த பாட்டீலின் பின்புலம் எனன் என்பது பற்றி இப்போது மகாராஷ்டிரா அரசு குடைந்தெடுத்து வருகிறது.
 
மலேகான் குண்டுவெடிப்பு
ஏற்கெனவே இதே மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
திட்டமிடப்பட்ட சதி
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறுகையில், 500 மீட்டர் தொலைவுக்குள் 45 நிமிட நேரத்தில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
 
மேலும் வெடிக்காத இரண்டு குண்டுகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய தடவியல் துறையினர் புனே சென்று அது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் சிங் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்