சிரியாவில் அதிபர் பசீர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி
நடைபெறுகிறது. இதை ஒடுக்க ராணுவம் நடத்தும் தீவிர குண்டுவீச்சு
தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாகிறார்கள்.
ராணுவ தாக்குதலும் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கிடையில் இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில்
நடைபெற்றது. இதில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து சிரியாவை சஸ்பெண்டு
செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் எக்மெலிதீன் இஷானோகுலு
கூறுகையில், அங்கு(சிரியா) மனித உயிர்கள் பலியாவதை தடுக்க அரசியல் ரீதியான
அமைதி தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய சமுதாயத்தின் நிலைப்பாடு
ஆகும். அதை சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்து காட்டவே இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். ஆனால் சிரியா மீதான சஸ்பெண்டு
நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அலி அக்பர் எதிர்ப்பு
தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக