அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் சினேகல் நாட்டில் 10 லட்சம் குழந்தைகள் பட்டினி

ஆப்பிரிக்காவில் மேற்கு பகுதியில் சினேகல் என்ற நாடு உள்ளது. இங்கு வாழும்  மக்களில் 94% பேர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சமீபகாலமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் இங்குள்ள மக்களால் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. உணவு பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாமல் பெரும்பாலும் பட்டினியாக கிடக்கிறார்கள். 

சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உடல் மெலிந்து நோய்வாய்ப்பட்டு இருப்பதாக ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள மாலி, நைஜர், சாட், முரிட்டோனியா ஆகிய நாடுகளில் இதே போன்ற நிலைமை நிலவுகிறது.


இந்த நாடுகளில் மட்டும் 18 லட்சம் பேர் போதிய உணவு இல்லாமல் பட்டினி கிடப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நாடுகளில் இருக்கும் அரசுகளின் நிர்வாக திறமையின்மை காரணத்தினால் தான் இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

பட்டினியை தவிர்க்க உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவ  வேண்டும் என மற்ற நாடுகளை ஐ.நா.சபை கேட்டுக் கொண்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்