கவுகாத்தி, ஆக.16 - அசாம் மாநிலத்தில் மீண்டும் இனக்கலவரம் வெடித்தது.
இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தில்
உள்ள பல மாவட்டங்களில் பழங்குடி இனத்தவர்களான போடோ தீவிரவாதிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் 80-க்கும்
மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
கலவரத்தை ராணுவம் அடக்கியது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் இந்த இரண்டு இனத்தவர்களுக்கும் இடையே மோதல்
நடந்தது. நல்பாரி மற்றும் கம்ரூப் மாவட்டங்களில் இந்த மோதல்
வெடித்துள்ளது.
வன்முறையாளர்கள் ஒரு பஸ்சையும் மரப்பாலத்தையும் தீ வைத்து
எரித்தனர். இதனையொட்டி கலவவத்தை அடக்க அந்த மாவட்டங்களுக்கு
ராணுவத்தினரும் இணை ராணுவத்தினர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த
கலவரத்திற்கு வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்துள்ள முஸ்லீம்கள்தான்
காரணம் என்று பாசிஸ்ட்களால் திரித்து கூறப்படுகிறது.
பஸ் மற்றும் பாலம் எரிக்கப்பட்டதை கண்டித்து
முஸ்லீம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில் வருகின்ற 20-ம் தேதி
ரம்சான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தாங்கள் முஸ்லீம்களால்
தாக்கப்படலாம் என்று கருதி கர்நாடகம் மற்றும் பல மாநிலங்களில் உள்ள அசாம்
மாநிலத்தவர்கள் வேறு இடத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக