அண்ணனை விடுவியுங்கள் என கதறி அழும் தங்கை |
ஜம்மு
காஷ்மீர்: மாநிலம் ஸ்ரீநகரில் சமீபத்தில் 12 வயது சிறுவன் ஒருவன்
நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல் உட்பட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் கைது
செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு -
காஷ்மீர் மாநிலத்தில், தற்போது அமைதி நிலவுவதாக அம்மாநில முதல்வர் ஒமர்
அப்துல்லா சமீப நாட்களாக, அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், நிலைமை அதற்கு மாறாக இருப்பதாக வெளிக்காட்ட போலீசார் முயன்று வருவதாக அங்குள்ள சிலர் புகார்
கூறுகின்றனர்.
சிறுவர்களை
குறி வைத்து போலீசார் கைது செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
போலீசாரின் இந்த அதிரடி வேட்டையில், சமீபத்தில் கைதானவன் பைசான் பஷீர்
சோபி, 12 வயது. சிறுவனான இவனை, கடந்த ஞாயிறன்று, ஸ்ரீநகரில் போலீசார் கைது
செய்தனர். இவன் மீது தீவைப்பு, கொலை முயற்சி மற்றும் நாட்டிற்கு எதிராக
போர் தொடுத்தல் போன்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
கடந்த
திங்களன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இச்சிறுவனை, 15 நாள் காவலில் வைக்க
கோர்ட் உத்தரவிட்டாலும், மறுநாள் அவனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இவனுடன்
சேர்த்து கைது செய்யப்பட்ட மற்ற நான்கு சிறுவர்கள் ஸ்ரீநகர் மத்திய
சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,
பல சிறுவர்களை போலீஸ் தேடி வருகிறது. சிறுவன் பைசானைப் போல வேறு பல
சிறுவர்கள் இதற்கு முன்னரும் பொதுப் பாதுகாப்பு சட்டம் உட்பட கடுமையான
சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குறை
கூறுகின்றனர். போலீசாரின் இப்போக்கு காஷ்மீர் மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக