அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

மியான்மர் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு உதவிகளை வழங்குகிறது சவுதி அரேபியா

மியான்மர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது.

மியான்மர் நாட்டில் வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ள ரகின் மாகாணத்தில், கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது.

ரகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில்  எட்டு லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர். மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் என்ற தவறான குற்றச்சாட்டின் பேரில் குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது.

இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதுவரை 50 பேர் பலியாகினர்.

இதையடுத்து மவுங்தா பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி ஏராளமான முஸ்லிம்கள்  வங்கதேசத்துக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

மியான்மரில் உள்ள முஸ்லிம்கள் அந்நாட்டு இராணுவத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதை இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டித்துள்ளன.

இதற்கிடையே இந்த மாநாட்டின் உறுப்பினரான சவுதி அரேபியா கலவரத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை அறிவித்துள்ளது.

இந்த நிவாரணப் பொருட்களை உடனடியாக மியான்மருக்கு அனுப்ப, சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்