அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

இளம்பெண்கள் குறித்து மோசமான கருத்து தெரிவித்த மோடிக்கு தலைவர்கள் கண்டனம்

சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி அளித்த பேட்டியில், குஜராத் மாநிலத்தில் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். இங்குள்ள பெண்கள் உடல் ஆரோக்கியத்தை காட்டிலும் உடல் அழகாய் இருப்பதிலே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு பெண் தனது மகளிடம் பால் வாங்கி வர சொன்னால், அவர்களிடையே சண்டை வருகிறது. அப்போது மகள் தனது தாயிடம் பால் குடித்தால் உடம்பு குண்டாகிவிடும் அதனால் குடிக்கமாட்டேன் என்கிறாள் என்று கூறியிருந்தார்.
 
இதற்கு மத்திய செய்தித் துறை மந்திரி அம்பிகா சோனி கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:-
 
நரேந்திர மோடி உலகின் ஒரு தலை சிறந்த நிர்வாகியாக தன்னை  கருதிக் கொண்டு குறிப்பாய் பெண்களுக்கு எதிராக குழந்தை தனமாக பேசி வருகிறார்.அவரது மந்திரி சபையில் அனேக பிரச்சினைகள் இருக்கின்றன அதைவிட்டு விட்டு இதுபோன்று அர்த்தமற்ற சிறு சிறு விசயங்களில் தலையை நீட்டி வருகிறார்.
 
குஜராத்தில் பெண்கள்  தங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் உணவு அருந்துவதையே தியாகம் செய்கிறார்கள். அதைப் பற்றிய தெரிந்து கொள்ளாமல், பெண்கள் அழகை கருத்தில் கொண்டு சரியாக சாப்பிடுவதில்லை என்று கூறி இருக்கிறார். இதை விட அவர் மோசமாக பேசமுடியுமா?குஜராத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் தகுதி அவருக்கு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
 
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி கிருஷ்ணா திராத் கூறியதாவது:-
 
இப்படி அவர் கூறுவது முற்றிலும் தவறானது. ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் அவளது  ஆரோக்கியத்தை பேணும்   உரிமை இருக்கிறது. இதைப்பற்றி யாரேனும் தவறாக புரிந்து கொள்வார்கள் என்றால் அவர்களிடம் போதுமான அறிவு இல்லை என்பது தான் அர்த்தம்.
 
காங்கிரஸ் எம். பி. கிரிஜா வியாஸ்:-
 
குஜராத் முதல் மந்திரி நரேந்திர  மோடி இவ்வாறு கூறியதை கடுமையாக எதிர்க்கிறோம். பெண்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும். அவரது மாநிலத்தில் மக்கள் ஆரோக்கியமற்று பஞ்சத்தில்  இருப்பதை  மாற்றவேண்டியது அவரது பொறுப்பு. 
 
மோடி அவரது மாநிலத்தில்  பஞ்சம் நிலவுவதை மட்டும் மறைக்கவில்லை இளம் பெண்களை கிண்டல் செய்தும் இருக்கிறார். பெண்கள் அழகில் அக்கறை கொள்வதில் எந்த தவறும்  இல்லை. அதை குறை சொல்லக் கூடாது.
 
தேசியவாத காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர்:-
 
நாட்டின் நிலவும் பஞ்ச நிலைமையை மறைக்க நரேந்திர மோடி இவ்வாறு கூறியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இதுபோன்று ஒரு முதல்வர் பதிலளிப்பது முறையல்ல.
 
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்:-
 
2002 ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தில் அவரது அமைச்சர்கள் குற்றவாளிகள் என்று நிருபிக்கப்பட்டிருப்பதற்கு நரேந்திர மோடி மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அவர் பதவியை விட்டு விலகி இருக்கவேண்டும்.
 
குஜராத்தில்  மோடி ஒரு முக்கிய குற்றவாளி. தீவிரவாத இயக்கத்தினரான அவர்கள் எப்பொழுதும் இதுபோன்றுதான் பேசுவார்கள். பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் பாரதீய ஜனதா அதரவுடன் நடைபெறும் பீகார் மாநிலத்திலும் அதிகரித்து வருகிறது.
 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்