சூடான் நாட்டில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால்
இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர்
தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் பெய்துவரும் கனமழையால் 32 பேர் பலியானதாகவும்,
4700 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், மேலும் 35,000 விலங்குகள்
கொல்லப்பட்டுள்ளதாகவும் சூடான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கிழக்கு சூடானின் டார்பர் பகுதியில் மட்டும் வெள்ளப்பெருக்கினால்
14,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் இதுபோன்று, கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கால் 64 பேர் பலியாயினர், 30,000 வீடுகள் சேதம் அடைந்தன,
மேலும் 3,65,000 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக