ஜனாதிபதி
பதவி வகித்த பிரதீபா பாட்டீல், பதவியில் இருந்தபோதும், விலகிய பின்னரும்
பல்வேறு சர்ச்சையில் சிக்கியவர். ஜனாதிபதியாக இருந்த வரை பதவி
வகித்தவர்களில், அதிக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர் பிரதீபா பாட்டீல்
மட்டுமே.
ஜனாதிபதி
மாளிகைளில், குடும்ப உறுப்பினர்கள் அதிகம் பேரை குடியிருக்க வைத்தவரும்
இவர்தான். இதனால், சர்ச்சை நாயகியாக பிரதீபா பாட்டீல் பார்க்கப்பட்டார்.
இந்நிலையில்,
அதிகளவில் விமானப் பயண செலவு செய்தவரும் இவர்தான் என்று இப்போது தகவல்கள்
வெளியாகி உள்ளன. தகவல் அறியும் உரிமை ஆர்வலரான சுபாஷ் அகர்வால், இந்திய
ஜனாதிபதிகளின் விமான பயண செலவு, வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட விவரங்களை
சம்பந்தப்பட்ட துறைகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டு
பெற்றார்.
அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
இந்திய
விமானப்படை விமானத்தை அதிகமாக பயன்படுத்தியவர் பிரதீபா பாட்டீல். இவர் 255
முறை இந்திய விமானப்படை விமானத்தை பயன்படுத்தி உள்ளார். பிரதமர்
மன்மோகன்சிங் 108 தடவையும், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி 106 முறையும்
இந்த விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த
2008, நவம்பர் மாதம் முதல் 2011, அக்டோபர் மாதம் வரையிலான மூன்றாண்டுகளில்
மட்டும் 18 நாடுகளுக்கு பிரதீபா பாட்டீல் சென்றுள்ளார். வியட்நாம்,
இந்தோனேஷியா, ஸ்பெயின், போலந்து, ரஷ்யா, கஜகிஸ்தான், இங்கிலாந்து, லாவோஸ்,
கம்போடியா, ஐக்கிய அரபு நாடுகள், சிரியா, மொரீசியஸ், கொரிய குடியரசு,
மங்கோலியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரே லியா போன்ற நாடுகளுக்கு அரசு முறை
பயணமாக சென்றுள்ளார்.
இவருக்கு
முந்தைய ஜனாபதிகளான அப்துல்கலாம் 17 நாடுகளுக்கும், எஸ்.டி.ஷர்மா 16
நாடுகளுக்கும், கே.ஆர்.நாராயணன் 10 நாடுகளுக்கும் சென்று வந்துள்ளனர்.
பிரதீபா
பாட்டீல் மூன்று ஆண்டுகளில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களுக்காக
விமானங்களை பயன்படுத்திய வகையில் ஆன செலவு ரூ.140 கோடி. இதில் பெரும்பகுதி
செலவு தொகையை வெளியுறவு துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக