அமெரிக்காவில் மிசெüரி பகுதியில் உள்ள
மசூதி தீயில் எரிந்து நாசமானது. விஸ்கான்சின் பகுதியில் உள்ள
குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநாளே இஸ்லாமிய மையம்
எரிந்து சாம்பலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. தீப்பற்றி எரிந்தபோது இதில் எவரும் இருக்கவில்லை என்று மிசெüரி பகுதி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீப்பற்றியதற்கான காரணத்தை புலனாய்வு (எப்பிஐ) அதிகாரிகளுடன் இணைந்து தீயணைப்புத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை இப்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. தீ விபத்துக்கான காரணம் முழுமையாகக் கண்டறியப்படும் என்று எப்பிஐ அதிகாரி மைக்கேல் கேஸ்ட் தெரிவித்தார்.
வழிபாட்டுத் தலத்தில் ஏதேனும் வன்முறை நிகழ்ந்திருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க-இஸ்லாமிய உறவுக்கான கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
இதே மையத்தில் கடந்த ஜூலை 4-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அதற்குக் காரணமானவர்களைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 15 ஆயிரம் டாலர் பரிசுத் தொகை அளிக்கப்படும் என எப்பிஐ அறிவித்திருந்தது.
திங்கள்கிழமை நிகழ்ந்த தீ விபத்துக்குக் காரணமானவர்கள் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு அளிக்கப்படும் என எப்பிஐ அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக