அஸ்ஸாம் நிவாரண நிதிக்காக ஈகைப்பெருநாளில் பாப்புலர் ஃப்ரண்ட் திரட்டிய
நிதிக்கு தாராளமாக உதவி செய்த பொதுமக்கள், அனுதாபிகள் ஆகியோருக்கு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மத்திய செயலக கூட்டம் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறது.
கலவரம் பாதித்த பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில அரசு சாரா நிறுவனங்களின் மூலமாக நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்காணித்து வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் நிவாரண நிதிக்காக வசூலிக்கப்பட்ட தொகை அந்தந்த மாநில நிர்வாகத்தினரால் வெளியிடப்படும். மேலும் டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் என்ற அரசு சாரா நிறுவனத்திற்கு ரூபாய் 50 இலட்சத்தை கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிறுவனம் ஏற்கனவே அஸ்ஸாம் நிவாரணப் பணிகளில் முழுவீச்சுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த மத்திய செயலக கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். சமீபத்தில் அஸ்ஸாம் சென்று நிலவரங்களை நேரில் ஆய்வு செய்த வந்த தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அது குறித்து சுருக்கமான அறிக்கையை கொடுத்ததுடன் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விவரித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக